ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் மீயொலி தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியை,முனைவர் பி. பத்மாவதி, சிறப்புரை
தூத்துக்குடி 2023 செப் 11 ;தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் மீயொலி தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியை,முனைவர் பி. பத்மாவதி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு மீயொலி தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில், இயற்பியல் துறை சார்பில் ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகளில் மீயொலி தொழில்நுட்பத்தின் எல்லைகள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இயற்பியல் துறை இரண்டாமாண்டு மாணவி க.சண்முக ஈஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியை,முனைவர் பி. பத்மாவதி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு மீயொலி தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை தலைவர் ரா. சுய பத்ர ஹரிதா மற்றும் முனைவர் ந. ரத்னா சிறப்பாக செய்திருந்தனர். மாணவி ஜைனாஃப் நிஷா நன்றி நவிழ விழா இனிதே நிறைவுற்றது.