Onetamil News Logo

சைக்கிளில் சென்று பழக்கடைகள் மற்றும் மளிகை கடைகளை ஆய்வு செய்த அமைச்சர் ;பரபரப்பு 

Onetamil News
 

சைக்கிளில் சென்று பழக்கடைகள் மற்றும் மளிகை கடைகளை ஆய்வு செய்த அமைச்சர் ;பரபரப்பு 


புதுவை  2020 ஏப்ரல் 4 ;புதுச்சேரி எல்லை பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில்  மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தீவிர சோதனைக்கு பின் அனுமதித்து வருகின்றனர்.புதுவையின் நிலவரம் குறித்து நாள்தோறும் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுபோல் நேற்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனியாக சைக்கிளில் சென்று நேரு வீதியில் உள்ள பழக்கடைகள் மற்றும் மளிகை கடைகளை ஆய்வு செய்தார். அதன் பின் புதுவை புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றார். பொதுமக்கள் அங்கு சமூக இடைவெளி விட்டு நின்று காய்கறிகள் வாங்குவதை பார்வையிட்டார். தேவையான காய்கறிகள் தடையின்றி கிடைக்கிறதா? என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் நாள்தோறும் காய்கறி மார்க்கெட்டுக்கு வராமல் 5 நாட்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளுமாறும், வெளியில் நடமாடுவதை அறவே நிறுத்தி கொள்ளுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தினார்.அதன்பின் அங்கிருந்து சைக்கிளிலேயே இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை வழியாக கோரிமேடு சென்றார். மாநில எல்லைப்பகுதியான அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக போலீசார் டிராக் சூட், டி-சர்ட் அணிந்து சைக்கிளில் வந்த அவரை அமைச்சர் என்று தெரியாமல் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் தன்னை புதுச்சேரி அமைச்சர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன்பிறகு அவரை போலீசார் அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo