Onetamil News Logo

2500 ஏக்கர் விவசாய நிலங்களை தனிநபருக்கு பத்திரபதிவு செய்த புகாரில் மேலிட உத்தரவால் பத்திரப்பதிவு ரத்து, புதுக்கோட்டை சார் பதிவாளர் மோகன்தாஸ் சஸ்பெண்ட் 

Onetamil News
 

2500 ஏக்கர் விவசாய நிலங்களை தனிநபருக்கு பத்திரபதிவு செய்த புகாரில் மேலிட உத்தரவால் பத்திரப்பதிவு ரத்து, புதுக்கோட்டை சார் பதிவாளர் மோகன்தாஸ் சஸ்பெண்ட் 


தூத்துக்குடி 2022 மே 13 ;2500 ஏக்கர் விவசாய நிலங்களை தனிநபருக்கு பத்திரபதிவு செய்த புகாரில் மேலிட உத்தரவால் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது.                                                                                                                            தூத்துக்குடி 2500 ஏக்கர் விவசாய நிலங்களை தனிநபருக்கு பத்திர பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளரை மோகன்தாஸை கண்டித்து  பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் விவசாயிகள் சார் பதிவாளரை அலுவலகத்தில் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் மேலிட உத்தரவால் பத்திரப்பதிவு இன்று பிற்பகலில் ரத்து செய்யப்பட்டது.
         தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, ஆகிய கிராமத்தில் சுமார் 500 விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 2500 ஏக்கர் விவசாய நிலத்தை  தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் மோகன்தாஸை சஸ்பெண்ட்செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
          புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தை பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சசிகலா புஷ்பா விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்கே பத்திர பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.
பின்னர் சசிகலாபுஷ்பா அளித்த பேட்டியில் சார் பதிவாளர் இன்று மதியம் 12மணிக்குள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக  உறுதியளித்துள்ளார். திமுக ஆட்சியில் அனைத்து முறைகேடுகளும் நடைபெறுகிறது. தமிழகத்தில் எங்கு முறைகேடு நடந்தாலும் மாநில தலைவர் அண்ணாமலை அனுமதியோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக பிஜேபி கட்சி தொடர்ந்து போராடும்;. 24 மணி நேரத்தில் கோரிக்கை ஏற்க்கப்படவில்லை என்றால் வெளியில் இன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா நேற்று தெரிவித்தார்.இந்த நிலையில் 2500 ஏக்கர் விவசாய நிலங்களை தனிநபருக்கு பத்திரபதிவு செய்த புகாரில் மேலிட உத்தரவால் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது.                                            இன்று 2500 ஏக்கர் நிலத்தை வழங்கிய திருநெல்வேலி சாந்தி நகர் பகுதியைச் சார்ந்த செந்தில் ஆறுமுகம் மற்றும் அவற்றை வாங்கிய கோயம்புத்தூர் வடக்கு ரயில்வே லைன் பகுதியைச் சார்ந்த ஆதித்தேவ்  க்ரீம் டெக் அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குனர் அன்பு ராஜ் கிஷோர் ஆகியோர் இன்று புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆஜராகி விசாரணையில் கையெழுத்திட்டனர் அதன் பின்னர் ரத்து செய்யப்பட்டது.            
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo