Onetamil News Logo

புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தலப் பெருவிழா ;ஆயிரக்கணக்கான மக்கள் சமய வேறுபாடுகளை களைந்து ஒன்றுகூடி கொண்டாட்டம்

Onetamil News
 

புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தலப் பெருவிழா ;ஆயிரக்கணக்கான மக்கள் சமய வேறுபாடுகளை களைந்து ஒன்றுகூடி கொண்டாட்டம்


புளியம்பட்டி 2019 பிப்ரவரி 12 ;புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தலப் பெருவிழா ;ஆயிரக்கணக்கான மக்கள் சமய வேறுபாடுகளை களைந்து ஒன்றுகூடி கொண்டாட்டம் நடந்தது.  

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்னகத்துப்பதுவை என மக்களால் அழைக்கப்படும் புண்ணிய பூமியான புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தலப் பெருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கடைசி செவ்வாய்கிழமையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அது போல இந்த ஆண்டும் கடந்த 31 ஆம் தேதி கொடியேற்றத்தோடு தொடங்கியது. 13 நாட்களும் காலை மற்றும் மாலையில் திருப்பலியும் நற்கருணை ஆசிரும் நடைபெற்றன. திருத்தலத்தின் பெருவிழா நாளாகிய இன்று காலை முதல் திருப்பலியானது தொடர்ந்து நடைபெற்றது. பெருவிழாத்திருப்பலியானது நண்பகல் 11.30 மணி அளவில் பாளையங்கோட்டை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேராயர். அந்தோணி பாப்புசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தத் திருப்பலியில் ஏராளமான குருக்கள் கலந்து கொண்டார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் சமய வேறுபாடுகளை களைந்து ஒன்றுகூடுகிறார்கள். மக்கள் நேர்ச்சைக்காக மொட்டை போடுதல், நோயிலிருந்து சுகம் பெற வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துதல் மற்றும் கும்பிடுசேவை செய்தனர். 13 முறை ஆலயத்தினை சுற்றி வந்து செபித்தல், புதுமைக்கிணற்றில் குளித்தல் மற்றும் புனித அந்தோனியாரிடம் குழந்தைகளை விற்று வாங்குதல் போன்றவை காலந்தோறும் இங்கு நடைபெறும் பாரம்பரிய நிகழ்வுகளாகும். இந்தத் திருவிழா நிகழ்வுகளில் இலட்சக்கணக்கான புனித அந்தோனியாரின் பக்தர்கள் கலந்து அந்தோனியாரின் ஆசிரைப் பெற்று சென்றார்கள். இந்த திருவிழா ஏற்பாடுகளை திருத்தலத்தின் பங்குத்தந்தை அருட்திரு. மரிய பிரான்சிஸ், உதவிபங்குத்தந்தைகள் அருட்திரு. எட்வின் ஆரோக்கிய நாதன், அருட்திரு. சதிஷ் செல்வ தயாளன், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்து இருந்தார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo