Onetamil News Logo

புன்னக்காயலில் மீன்பிடி தொழில் முடித்து வரும் மீனவர்களுக்கு குளிர் குடிநீர் ;கலெக்டர் தொடங்கிவைத்தார்.

Onetamil News
 

புன்னக்காயலில் மீன்பிடி தொழில் முடித்து வரும் மீனவர்களுக்கு குளிர் குடிநீர் ;கலெக்டர் தொடங்கிவைத்தார்.


புன்னைக்காயல்   2019 ஜூலை 20 ;தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புன்னக்காயலில் மீன்பிடி தொழில் முடித்து வரும் மீனவர்களுக்கு குளிர் குடிநீர் வழங்கும் எந்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,திறந்து வைத்தார். மேலும், புன்னக்காயலில் கால்பந்து விளையாட்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புன்னக்காயலில் பெரு நிறுவன சமூக செயல்பாடுகள் திட்டத்தின்கீழ் மீன்பிடி தொழில் முடித்து வரும் மீனவர்களுக்கு மீன் இறக்கு தளத்தில் குளிர் குடிநீர் வழங்கும் எந்திரம் திறப்பு விழா மற்றும் புன்னக்காயல் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சி இன்று (20.07.2019) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு, சிறப்பு தன்னிறைவு திட்டத்தில் ரூ.1.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மீனவர்களுக்கு குளிர் குடிநீர் வழங்கும் எந்திரத்தை திறந்து வைத்தார். மேலும், கால்பந்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். 
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசியதாவது:
புன்னக்காயல் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய சிறப்பு தன்னிறைவு திட்டத்தின் மூலம் ரூ.3 கோடி மதிப்பில் ஆத்தூர் பகுதியில் இருந்து தாமிரபரணி குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு பொதுமக்கள் சார்பில் செலுத்தப்பட வேண்டிய 30 சதவிதம் தொகை ரூ.72 லட்சத்தினை அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்கத்தின் (NUSI)   மூலம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகள் துவக்க விழா விரைவில் இங்கு நடைபெறும். மேலும் இங்கு மீன்பிடி தொழிலில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் கரை திரும்பியவுடன் குளிர்ந்த குடிநீர் அருந்தும் வகையில் இயந்திரம் அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்கத்தின் (NUSI)   துணைத்தலைவர் விமல்சன் அவர்களின் பங்களிப்புடன் ரூ.1.15 லட்சம் மதிப்பில் சிறப்பு தன்னிறைவு திட்டத்தின்மூலம் மீன் இறக்கு தளத்திலேயே திறந்து வைக்கப்பட்டுள்ளது.  மேலும் புன்னக்காயல் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உடற்பயிற்சியை அதிகரிக்கும் வகையில் கால்பந்து விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்துவதாக தெரிவித்தார்கள். மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன் உடற்பயிற்சியும் அவசியம். கால்பந்து போட்டி உடற்பயிற்சியை மேம்படுத்தும். இப்போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கும், வெற்றி பெறுபவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த ஊராட்சிக்கு தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்கத்தின் (NUSI)  துணைத்தலைவர் விமல்சன், திருச்செந்தூர் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி, ஆறுமுகநேரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, அரவிந்தன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபஸ்டின் பெர்னான்டஸ் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo