புதியம்புத்தூர்,போலீசார் செல்வம் ஸ்டோரில் திடீர் ஆய்வு,அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை 150 பாக்கெட்டுகள் பறிமுதல்,கடைக்கு சீல் வைப்பு
தூத்துக்குடி 2022 மே 14 ;ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைக்கு சீல்: உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நடவடிக்கை
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மேலபஜாரில், சோனியா நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (40) என்பவர், செல்வம் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மே 7 அன்று புதியம்புத்தூர் போலீசார் செல்வம் ஸ்டோரில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருளான கணேஷ் புகையிலை 150 பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஓட்டப்பிடாரம் உணவு பாதுகாப்பு துறை பொறுப்பு அலுவலர் காளிமுத்து,அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக செல்வம் ஸ்டோர்ஸ் கடைக்கு இன்று புதியம்புத்தூர் காவல் நிலைய போலீஸார் முன்னிலையில் சீல் வைத்தார்.