Onetamil News Logo

ராகங்களின் பெயர்கள் ;ராகத்தை பற்றி அறிய ;ராகத்திற்குரிய பாடல்கள் 

Onetamil News
 

ராகங்களின் பெயர்கள் ;ராகத்தை பற்றி அறிய ;ராகத்திற்குரிய பாடல்கள் 


இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது.கொஞ்சம் நீட்டி இழுத்துப் பாடினால் போதும்… ராகமா பாடறாங்கன்னு சொல்வதைப் பார்க்கலாம்! அப்புறம் இந்த பாட்டு, இந்த ராகம், அந்தப் பாட்டு, அந்த ராகம் ஏதேதோ சொல்லறாங்க! அனேக பேருக்கு இது புரியாத விளையாட்டு போல இருப்பதில் ஆச்சரியம் இல்லை.இசையை ரசிக்காத மனிதர்களே இல்லை, இசைக்கு இறைவனும் மயங்குவான் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். மனிதன் பிறக்கும் பொது “ ஆ…. என்ற ஒலியை எழுப்பியவாறே பிறக்கிறான்.பிறந்த பின் தாலாட்டும், இறந்த பின் ஒப்பாரியும் இக்குழந்தைக்கு பிற மனிதர்களால் பாடப்படுகிறது. ஆக இசை என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகவும், உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் கலந்துவிட்ட ஒன்றாகவும் மாறிப்போனது.
"இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்."
இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் ஆரோகணத்தில் கீழே செல்லும்போதும் (அவரோகணத்தில் - எந்த ஸ்வரங்களை  வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, அது ராகத்தில் எந்தெந்த ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும், எந்தெந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக இராகத்தில் இருக்கும் ஸ்வரங்களைப் பயன்படுத்தி இராகத்தின் ஸ்வர பாவங்களை முன்னிலையில் காட்டும் வகையில் இசையமைக்க இராகம் உதவுகிறது.                                                              
                                                                                                                                                                                                        
ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு. எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ராகத்தின் ஆரோகணத்திலோ அவரோகணத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர ராகம் என்று அழைக்கப்படும். கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு.
ஒரு ஸ்தாயில் இருக்கும் ஏழு ஸ்வரங்களில் இரண்டாம், மூன்றாம், ஆறாம், ஏழாம் ஆகிய ஸ்வரங்கள் மூன்று வகைப்படலாம், நான்காம் ஸ்வரம் இரண்டு வகைப்படும். இந்த வகைகளில் எந்த ஸ்வரத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் இராகம் காட்டும். ராகம் என்றால் என்ன? எப்படிக் கண்டு பிடிப்பது?
எளிமையா சொல்லணும்னா, ஸ,ரி,க,ம,ப,த,நி போன்ற ஸ்வரங்களை எந்த வரிசையில் ஒரு பாட்டின் இசை அமைப்பில் இருக்கிறதோ அதைப்பொறுத்து அதன் ராகம் அமைகிறது.
உதாரணத்திற்கு: ஸ ரி க ப நி ஸ என்றால் ஹம்சத்வனி,
ஸ ரி ம ப த ஸ என்றால் சுத்த சாவேரி
என்பதுபோல வருமென சொல்லலாம்!
தொடக்கத்தில் ஸ்வர வரிசைகளைக் கொண்டு இந்த ராகம் இதுவென்று சொல்வது கடினமானதுதான்.
எளிதான வழி ஏதும் இல்லையா?
எளிதான வழி, பல பாடல்களைக் கேட்பதுதான்… ஒரு ராகம் தெரிந்த பாடலை கேட்டுவிட்டு, பின்னர் அதே சாயலில் இன்னொரு பாடல் கேட்கும்போது, இந்தப் பாடலும் அந்த பாடலின் ராகம்தான் என கண்டு கொள்வதுதான்!!!
இப்படி கண்டுபிடிப்பதுவே ஷெர்லாக் ஹோம்ஸ் கதை மாதிரி ஒரு அலாதி இன்பமான விஷயம். கண்டுபிடித்தை பின் கேட்பது அதிலும் ஆனந்தம்!
ஒரு சில ராகங்களை அவ்வளவு எளிதாக கண்டு பிடிக்க இயலாதென்றாலும், ஆரம்ப நிலையில் இந்த வழி நிச்சயம் கை கொடுக்கும்!
உதாரணத்திற்கு ஒரு சில பாடல்களைப் பார்ப்போமே!
முதலில் மனதை இளக வைக்கும் ஷ்யாமா(சாமா) ராகத்தில்
வருவரோ வரம் தருவாரோ….?
மனது சஞ்சலிக்குதையே….
எப்போது வருவரோ, வரம் தருவாரோ…? 
என்ற கோபலகிருஷ்ண பாரதி பாடல், பாம்பே ஜெயஸ்ரீ பாடிட:ராகம் பற்றிய சொற்கள்/ராகங்களின் பெயர்கள் ;
ஆலாபனை, ஆரோகணம்,  அவரோகணம், அங்கம், ஐன்ய ராகம், கமகம், மேளகர்த்தா ராகம், பிரயோகம், ராகமாலிகை, சக்ரம், சம்பூர்ண ராகம், ஸ்ருதி, ஸ்வரம், சரிகமபதநி (ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம்), ஸ்தாயி, வக்ரம்,
ராகங்களின் பெயர்கள் ;
A - அம்ருதவாகினி,  அம்ருதவர்ஷினி, அசாவேரி, அடாணா, ஆபேரி, ஆபோகி, ஆகிரி, ஆனந்தபைரவி, ஆந்தோலிகா, ஆரபி
B - பகுதாரி, பங்காளா, பாலஹம்ஸா, பேகடா, பேஹாக், பைரவி, பாவப்ரியா, பூபாளம், பூசாவளி, பிலகரி, பிந்துமாலினி, பௌளி, பிருந்தாவனசாரங்கா
C - சக்ரவாகம், சலநாட்டை, சந்திரஜோதி, சாருகேசி, சாயாதரங்கிணி, செஞ்சுருட்டி, சிந்தாமணி, சித்தரஞ்சனி
D - தன்யாசி, தர்பார், தர்மாவதி, தேணுகா, தேவகாந்தாரி, தேவக்ரியா, தேவமனோகரி, திலிபகம், திவ்யாமணி, த்விஜாவந்தி
G - கமகக்ரியா, கமனாஸ்ரமம், கம்பீரநாட்டை, கானமுர்த்தி, காங்கேயபூஷணி, கருடத்வனி, காயகப்ரியா, கண்டா, கோபிகாவசந்தம், கௌளா, கௌளிபந்து, கௌரி, கௌரிமனோகரி, குர்ஜரி
H - ஹமிர்கல்யாணி, ஹம்ஸத்வனி, ஹம்ஸநாதம், ஹம்ஸாநந்தி, ஹரிகாம்போஜி(தி), ஹேமாவதி, ஹிந்தோளம், ஹிந்தோளவசந்தம், ஹுசேனி
I – ஈசாமனோகரி
J - ஜகன்மோகினி, ஜனரஞ்சனி, ஜயமனோகரி, ஜயநாராயணி, ஜயந்தசேனை, ஜயந்தஸ்ரீ
K - கதனகுதூகலம், கலாநிதி, கலாவதி, கல்யாணவசந்தம், கமலாமனோகரி, கமாஸ், காமவர்தினி (பந்துவராளி), காம்போஜி(தி), கானடா, கனகாங்கி, கன்னடா, கன்னடகௌளா, காந்தாமணி, காபிநாராயணி, கரகரப்ரியா, காபி, கர்நாடக காபி, கேதாரகௌளா, கேதாரம், கிரணாவளி, கீரவாணி, கோசலம், குந்தளவராளி, குறிஞ்சி
L - லலிதா, லதாங்கி
M - மகதி, மதுவந்தி, மத்யமாவதி, மலகரி, மலயமாருதம், மாண்டு, மந்தாரி, மணிரங்கு, மஞ்சரி, மனோகரி, மனோரஞ்சனி, மாலவஸ்ரீ, மானவதி,  மார்கஹிந்தோளம், மாயாமாளவகௌளா, மோகனம், மோகனகல்யாணி, முகாரி
N – நாககாந்தாரி, நாதநாமக்ரியா, நளினகாந்தி, நாராயணி, நாட்டை, நடபைரவி, நாட்டைக்குறிஞ்சி, நவநீதம், நவரோஜ், நாயகி, நீலாம்பரி, நீதிமதி
P - பாடி, பாவனி, பரஜ், பூர்ணசந்திரிகா, பூர்விகல்யாணி, புன்னாகவராளி, புஷ்பலதிகா
R - ரஞ்சனி, ரத்னாங்கி, ரவிச்சந்திரிகா, ரேவகுப்தி, ரீதிகௌளா
S - சகானா, சைந்தவி, சாலகம், சாலகபைரவி, சாமா, சாரங்கா, சரசாங்கி, சரஸ்வதி, சரஸ்வதிமனோகரி, சாவேரி, சண்முகப்ரியா, ஸ்ரீ, ஸ்ரீரஞ்சனி, சுபபந்துவராளி, சிம்மேந்திரமத்யமம், சிந்துபைரவி, சௌராஷ்டிரம், சுத்ததன்யாசி, சுத்ததேசி,  சுத்தசாவேரி, சிந்துராமக்ரியா, சுருட்டி, சூரியகாந்தம், ஸ்வராவளி
T – திலங், தோடி (ஹநுமத்தோடி)
V - வாசஸ்பதி, வாகதீஸ்வரி, வகுலாபரணம், வனஸ்பதி, வலஜி, வராளி, வசந்தா, வீரவசந்தா
Y - யதுகுலகாம்போதி, யமுனாகல்யாணி                                                                                                                          
                                                                                                                                                                                                        
தமிழ் பண்பாட்டின் பெருமையையும், பழமையையும் நிலைநாட்டும். இப்போது வழக்கத்திலுள்ள பெயர்களுடன் பழைய பண்களின் பெயர்களையும் பயன்படுத்துவது நல்லது.சம்பந்தரின் தோடுடைய செவியன் என்ற முதற்பாட்டு நைவளம் (நட்டபாடை) என்னும் பண்ணிலும் காரைக்கால் அம்மையாரிம் சில முதல் பாட்டுகளும் இதே பண்ணில் பாடப்பட்டதும் ஒப்புநோக்கத் தக்கது.
பழந்தமிழ் நூல்களில் 103 பண்கள் இருந்ததாகச் சொல்லபடுகிறது. அவைகளில் 23 பண்கள் தேவாரத் திருப்பதிகங்களில் பயன்படுதப்பட்டன:–
செவ்வழி, தக்கராகம், நேர்திறம்-புறநீர்மை, பஞ்சமம், காந்தாரம், நட்டபாடை, அந்தாளிக் குறிஞ்சி, பழம் பஞ்சுரம், மேகராகக் குறிஞ்சி, கொல்லிக் கௌவாணம், பழந்தக்கராகம், நட்டராகம், குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, செந்துருத்தி, தக்கேசி, கொல்லி, இந்தளம், காந்தார பஞ்சமம், கௌசிகம், பியந்தை, சீகாமரம், சாதாரி.
Surdas (1)
Bhaktakavi Surdas
பழைய பண்கள் இப்போது என்ன பெயரில் உலவுகின்றன என்பதைக் கீழ்கண்ட பட்டியல் காட்டும்:–
செவ்வழி = யதுகுல காம்போதி
சதாரி = காம வர்த்தினா
வியாழக் குறிஞ்சி = சௌராஷ்டிரம்
பழந்தக்க ராகம் = ஆரபி /சுத்த சாவேரி
இந்தோளம் = மாய மாளகௌளம்
புறநீர்மை = பூபாளம் /ஸ்ரீகண்டி
நட்டராகம் = பந்துவராளி
நட்டபாடை = நாட்டை
கொல்லி = பிலஹரி
கொல்லி கவ்வாமை = நவரோகி
தக்கேசி = காம்போதி
தக்கராகம் = ஏகதேச காம்போதி
நேரிசை = சிந்து கன்னடா
குறிஞ்சி = மலகரி
கௌசிகம் = பைரவி
காந்தார பஞ்சமம்= கேதார கௌளம்
பழம்பஞ்சுரம் = சங்கராபரணம்
மேகராக குறிஞ்சி == நீலாம்பரி
குறுந்தொகை = நாதநாமக்கிரியை
அந்தாளிக் குறிஞ்சி = சாமா / சைலதேசாட்சி
செந்துருத்தி = மத்யமாவதி
திருத் தாண்டகம் = ஹரிகாம்போதி
பஞ்சமம் = ஆஹிரி
ஏகாமரம் = புன்னாக வராளி
சீகாமரம் = நாதநாமக்கிரியை
கொல்லி, கொல்லி,க்கௌவாணம் = சிந்து கன்னடா
தேவார மூவர் ஊர் ஊராகச் சென்றபோது பண்களோடு பதிகங்களைப் பாடிச் சென்றனர். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன் என்று அவர் போற்றப்படுவதால் அவர் தமிழையும் இசையையும் தலம் தலமாக கோவில் கோவிலாகப் பரப்பியது தெரிகிறது. அவர்கள் காலத்துக்கு முன்னரே இந்தப் பண்கள் வழக்கில் இருந்ததால்தான் அவர்களால் இப்படிச் செய்யமுடிந்தது.
கோவில்களிலும் காலை, உச்சிக்காலம், மாலை, இரவு/ அர்த்தசாமம் என்று ஒவ்வொரு பொழுதுக்கும் ஒவ்வொரு பண் (ராகம்) பாடப்பட்டது. நாதசுரம் அல்லது வாய்ப்பாட்டு மூலம் இது நிகழ்ந்தது.
jandai melam
Jandai Melam.
இசை பற்றிய  பழைய கட்டுரைகள்:-
Saint who went to Heaven with a Flute in Hand (16 April 14,Post No 983)
How did Rare Indian Animal Asunam become extinct? (15 April 14,Post No 981)
True Art is Never Made to Order, post No.1066, 26-5-14
Acoustic Marvel of Madurai Temple 13-5-13
Superstition in the World of Music 12-4-14 (Post No.975)
Musical Pillars in Hindu Temples
Interesting Anecdotes from the World of Music (29 May 2014;Post No.1072)
Musician who Pledged a Raga (30 May 2014,Post No.1074)
Rain Miracles: Rain by Fire and Music (7 January 2012)
மழை அற்புதங்கள் (7 ஜனவரி 2012)
வலியைப் போக்க சங்கீதம் உதவும்!
Music Therapy for Pain Relief
இசைத் தமிழ் அதிசயங்கள் 31-1-2013
சங்கீதம் தோன்றிய வரலாறு- ஒரு புராணக் கதை 13-4-14 (976)
சப்தம் கேட்டால் இறந்துவிடும் அசுணமா? 15-4-14 (980)
கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன மனிதர் 16-4-14 (982)
ஸ்ரீராமர் மீது முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகள் 8-4-14 (963) ,                                                                                         
                                                                                                                                                                                                    
காலை, நன்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு பொழுதுகளுக்கும் தகுந்த இராகங்கள் உள்ளன. பொழுதிற்கு ஏற்ற ராகம் பாடும் வழக்கம் இந்துஸ்தானி இசையில் (வட இந்திய இசை) பின்பற்றப்படுகிறது, ஆனால் கர்நாடக இசையில் (தென் இந்திய இசை) குறைவாகவே பின்பற்றப்படுகின்றது.                                                                 
                                                                                                                                                                                                     
இந்திய பாரம்பரிய இசையின் இரு பாகங்களான கர்நாடக இசைக்கும் இந்துஸ்தானி இசைக்கும் வெவ்வேறு இராகங்கள் இருக்கின்றன.
சில ராகங்கள் இரு இசை முறைகளுக்கும் உரியன. தென் இந்திய இசையிலும் வட இந்திய இசையிலும் ஒரே ஆரோகணம் - அவரோகணத்தைக் கொண்டிருந்தாலும் வேறு பெயர்களைக் கொண்டுள்ளன. ஒரு எடுத்துக்காட்டாக கர்னாடக இசையில் "கல்யாணி" என்ற பெயர் கொண்ட இராகமும் இந்துஸ்தானி இசையில் "யமன்" என்ற பெயரைக் கொண்ட ராகமும் ஒரே ஆரோகணம் - அவரோகணத்தைக் கொண்டுள்ளன.
சில ராகங்கள் இரு இசை வழக்குகளில் ஒரே பெயரைக் கொண்டிருந்தாலும் வெவ்வேறு ஸ்வர வரிசைகளைக் கொண்டுள்ளன. ஒரு எடுத்துக்காட்டாக கர்னாடக இசையில் பைரவி ஹிந்துஸ்தானி இசையில் வரும் பைரவியை ஒப்பிடும் போது சில ஸ்வரங்கள் வேறுபாடு தவிர இராக பாவம் வேறு. ஹிந்துஸ்தானி இசையில் வரும் பைரவி கர்னாடக இசையின் தோடிக்கு சமம். கர்னாடக இசையின் பைரவி இந்துஸ்தானி இசையில் வரும் அஸாவாரி தாட்டோடு இணையும்.இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து "தாட்" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கின்றன. தென் இந்தியாவில் ராகங்கள் 72 மேளாகர்த்தா ராகங்களின் அடிப்படையில் ஜனக - ஜன்னிய ராகங்களாக வகுக்கப்படுகின்றன.                                           
                                                                                                                                                                                               
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம், அவ்வாறு மன அழுத்தம் ஏற்படுகிறபோது அதிலிருந்து விடுபட சிலர் மது அருந்துகின்றனர். சிலர் கோவிலுக்குச் செல்கின்றனர், சிலர் புகை பிடிக்கின்றனர், சிலர் திரைப்படம் காணச் செல்கின்றனர், சிலர் தனக்குப் பிடித்தவரிடம் சென்று தனது சோகங்களைச்  உரியவரிடம் கூறி ஆறுதல் தேட முயல்கின்றனர், இன்னும் சிலர் தான் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டு புழுங்கிக்கொண்டு இருக்கின்றனர். இதில் மிகச்சிலரே தனக்கு அழுத்தம் ஏற்படும் பொது தனக்குப் பிடித்த மெல்லிய இசையையோ, பாடலையோ கேட்கின்றனர்.
இசை மனிதனின் உணர்வுகளைத் தூண்டும் சக்தி படைத்தது. சங்க காலத்தில் போருக்குச் செல்வதற்கு முன்பு முரசு முழங்கி, கொம்பு (வாத்தியக்கருவி) ஊதப்பட்டு வீரர்களை இசை மூலம் உற்சாகப்படுத்தி போருக்குத் தயார் செய்வதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். அன்றைய காலகட்டத்தில் பாணர், விறலியர், கூத்தர், போன்றோர் மன அழுத்தத்தில் இருக்கும் அரசர்களையும், அமைச்சர்களையும் தன் இசையால் மகிழ்வுபடுத்தி, தானும் மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர்.
குழல், யாழ் என இருந்த தமிழரின் பூர்வீக இசைக்கருவிகள் பிற்காலத்தில் வளர்ச்சியடைந்து கம்பிக்கருவிகள் (வீணை, கிடார், வயலின்), காற்றுக்கருவிகள் (புல்லாங்குழல், நாதஸ்வரம், ஒத்து, முகவீணை, கிளாரினேட்), தோல் கருவிகள் (முரசு, பறை, தவில், பம்பை, உடுக்கை) போன்ற பலவகை இசைக்கருவிகளைக் கொண்டு நம் மக்களை இசைக் கலைஞர்கள் மகிழ்வித்து வந்தனர் என்பது வரலாறு.
இந்தக் கருவிகளை வாசிக்கும் போது மனிதரின் மனதிற்குள் இருக்கும் கோபம், அன்பு , அமைதி, இறக்கம், கருணை, அழுகை, மகிழ்ச்சி எனப் பல உணர்வுகளைத் தட்டி எழுப்பும் சக்தி இந்த இசைக்கருவிகளுக்கு உண்டு என்றால் அது மிகையாகாது.
முற்காலத்தில் ஆற்றுப்படுகைகளின் ஓரத்தில் வாழ்ந்த ஆதி தமிழ் மக்களின் இசையைக் கேட்ட பிற நாட்டவர்கள் இது “ கரை நாட்டு இசை” என்றனர். அதாவது ஆற்றங்கரை ஓரத்தில் வாழ்ந்ததால் இப்பெயர் வந்தது. பிற்காலத்தில் இக்கரை நாட்டு இசையே பேச்சு வழக்கில் திரிந்து  கர்னாட்டிக் இசை என மாறியது எனக் கூறுகின்றனர் சில தமிழ் அறிஞர்கள்.
இந்த கர்நாட்டிக் இசையின் அடி நாதமாக ச,ரி,க,ம,ப,த,னி,ச  என்ற ஏழு எழுத்துக்களைக் கொண்டு ஏழு சுரங்களுக்குள் பல வித ராகங்களை உருவாக்கி பாடல்களாகப் பாடி வந்தனர். தற்போது தமிழ் திரை இசையமைப்பாளர்களில் சிலர் இந்த ராகங்களை அடிப்படையாக எடுத்துக் கொண்டு திரையில் மெல்லிசைப் பாடல்களையும், துள்ளிசைப் பாடல்களையும் உருவாக்கி மக்களுக்குத் தருகின்றனர்.                        சத்தத்தில் சங்கீதம் இருக்கு – அதை
கேட்கத்தான் நெஞ்சத்தில் இருக்கு.
என்ற கவிஞர் முகிலன் எழுதிய இவ்வரியில் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு சத்தம் ஒளி வடிவாகவும், இசை வடிவாகவும் இருக்கிறது. அதைக் கேட்காத நெஞ்சம் கிறுக்கு (மயக்கநிலை) ஆகிவிடும் எனக் கூறுகிறார்.
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை   - திருவிளையாடல்
இசை கேட்டால் புவி அசைந்தாடும், அது இறைவன் அருளாகும்.
 இசையால் வசமாக இதயமேது?
எனப் பாடும் தமிழ் திரைப்பாடல்களில் தமிழ் இசையின் அருமை பெருமைகள் வியந்து பாடப்படுகிறது.
எவனொருவன் நல்ல ரசிகனோ அவன் நல்ல கலைஞனாகிறான். எவனொருவன் நல்ல கலைஞனோ அவன் அறிஞனாகிறான். ஆக இசையைக் கேட்கவும், ரசிக்கவும் நம் மனதிற்கு நல்ல ஒரு ரசனை உணர்வு வேண்டும். அந்த ரசனை உணர்வு இல்லாதவர்கள் இங்கே உயிர் இருந்தும் சடங்களாகவும், உடல் இருந்தும் சவங்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இக்காலச் சூழலில் மனிதர்களுக்கு பற்பல நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு புதுக் கண்டுபிடிப்புகளும் ஒரு புதிய நோய் உருவாக்கி வருகிறது என்பதே உண்மை. ஆக  இன்றைய மனிதர்களின் வாழ்க்கை  இயந்திரத்தனமான வாழ்வாக பலருக்கும் மாறிவருவது காலம் செய்த கோலமாகும்.
இப்படிப்பட்ட இயந்திர வாழ்வில் ஓய்வில்லாமல்,உறக்கமில்லாமல், நல்ல உணவுகளைக் கூட நேரத்திற்கு சாப்பிட முடியாமல் பலர் இருப்பதால் பல நோய்கள் இம்மனிதர்களைத் தாக்கும் போது பெரும்பாலானவர்கள் ஆங்கில மருந்தை எடுத்துக் கொள்கின்றனர்.
இச்சூழலில் நோய்களை இசையின் மூலம் குணப்படுத்துவது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. அதெப்படி இசை மூலம் குணமாக்க முடியும்? இசைக்கு அப்படி ஒரு திறன் உண்டா? எனப் பல கேள்விகள் எழுவது இயற்கையே. ஆனால் அந்த இசையால் பற்பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதே உண்மையான ஒன்றாகும்.
இசையால் இறை நிலை  அடையாளம் என்கின்றனர் சில இசை வல்லுனர்கள். அவ்வளவு ஏன், உலகத்தில் உள்ள எல்லா மதங்களின் வழிபாட்டின் போதும் எதோ ஒரு இசைக்கருவியை வாசித்தும், பாடல்கள் பாடியும் இறைவனை வழிபட்டு வருகின்றனர். இச்சூழலில் கர்நாடக சங்கீத இசையில் சில குறிப்பிட்ட ராகங்களைக் கேட்டால் நோய்கள் குணமாகும் என தமிழகத்தில் நடந்த சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தாலி நாட்டில் உள்ள பாவியா என்ற நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருந்துகள் பிரிவுப் பேராசிரியர் லூசியானா  பெர்னார்டி தலைமையில் இந்த இசை தொடர்பான ஆய்வுகள் நடை பெற்றன. இசை மூலம் நோய்களைக் குணமாக்க முடியும் என இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு நபர் இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர். கிஸ்டீரியா  என்ற நோயை நரம்புக் கருவிகளின் இசை குணமாக்கி விடுகிறதாம். அமெரிக்காவில் ஒரு பல் மருத்துவர் மயக்க மருந்தோ அல்லது வலி குறைப்பு மருந்தோ இல்லாமல், மெல்லிய இசையை எழுப்பியே நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். மெல்லிசையைக் கேட்கும் போது இதய நோய் குணம் ஆகிறதாம். அதிலும் குறிப்பாக மாரடைப்புக்குப் பிறகு நோயாளிகள் குணமாக மெல்லிசை பெரிதும் பயன்படுகிறது.
நல்ல இசை நம் மனதையும் எண்ணங்களையும் அமைதிப் படுத்துவதோடு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம், தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்கள் இசையைக் கேட்பதமன் மூலம் குணப்படுத்தமுடியும் என்கின்றனர். துடும்பு, பறை, மத்தளம், டிரம்ஸ் போன்ற தொல்கருவிகள் ஒலிகளைக் கேட்கும்போது நம் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தி நமது தசை நார்களை தளரச் செய்கின்றன. நமது கிராமங்களில் இன்றும் கூட தீ மிதித்தல், அலகு குத்துதல், சாமி இறக்குதல், சீர்வரிசை கொண்டு வருதல், பால் குடம் கொண்டு வருதல், தேர் இழுத்தல்  போன்ற சுப காரியங்கள்  நிகழும் போது தவில், பறை, உருமி, பம்பை, உடுக்கை போன்ற தொல்கருவிகள் வாசிக்கப்படுவதால் இதைக் கேட்பவர்களுக்கு ஒரு வித மனக்கிளர்ச்சி ஏற்பட்டு உள்ளத்திற்கும், உடலுக்கும் ஒரு புதிய வேகம், உற்சாகம், உண்டாவதை நாம் யாராலும் மறுக்க முடியாது. இவ்விசையைக் உற்சாகத்தில் நடனம் ஆடுவதையும், சாமி வந்து ஆடுவதையும் பார்க்கலாம்.
இந்திய மருத்துவத்துறையில் குறிப்பிடத்தக்க மைல் கல் இசைமருத்துவம் ஆகும். அதாவது கர்ப்பிணிகளுக்கு இனிய இசை வாயிலாக சுகப்பிரசவம் நிகழுகின்ற அதிசயம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் காலை, மாலை வேளையில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் நல்ல ராகமுள்ள பாடலைப் பாடி வந்தால் அல்லது இனிய இசையைக் கேட்டு வந்தால் அவர்களுக்கு நிச்சயம் சுகப்பிரசவம் ஏற்படுகிறதாம். இந்த முறை இந்தியாவில் தமிழகத்தில் தான் முதலாவதாக அமலுக்கு வந்திருக்கிறது என்பது தமிழ்ப் பெண்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.
இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன்  என்ற இசைக்கலைஞர் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.
நம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும், அந்த ராகத்தில் அமைந்த திரைப் பாடல்களையும், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.
அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் – பூபாளம் 
பாடல்  :      சலங்கயிட்டால் ஒரு மாது 
படம்     :      மைதிலி என்னைக் காதலி
 பாடல்  :      செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
    படம்      :      முள்ளும் மலரும்
 அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் – மலையமாருதம், சக்கரவாகம்
 பாடல்  :     கண்மணி நீ வர காத்திருந்தேன் – மலையமருதம்
    படம்    :     தென்றலே என்னைத் தொடு
 பாடல்  :     நீ பாதி நான் பாதி கண்ணே – சக்கரவாகம்
   படம்    :     கேளடி கண்மணி
 பாடல்  :     பூப்பூக்கும் மாசம் தை மாசம் – மலையமாருதம்
    படம்    :     வருசம் 16
பாடல்  :     உள்ளத்தில் நல்ல உள்ளம – சக்கரவாகம்
    படம்    :     கர்ணன்
 பாடல்  :     ஓராறு முகமும் ஈராறு கரமும்
   படம்    :     டி.எம்.எஸ். பக்திப் பாடல்கள்
பாடல்  :     நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
    படம்    :     தியாகம்
 
சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி
பாடல்:  தூங்காத விழிகள் ரெண்டு.
படம் :   அக்னி நட்சத்திரம்
 கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய – அரிகாம் போதி 
பாடல்:   கண்ணுக்கு மை அழகு
  படம் :    புதிய முகம்
பாடல்:   உன்னை ஒன்று கேட்பேன்
  படம்  :   புதிய பறவை
பாடல்:   ஒரே பாடல் உன்னை அழைக்கும்
  படம்  :   எங்கிருந்தோ வந்தாள்.
*பாடல்:   பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
  படம்  :   வருசம் பதினாறு.
மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட – ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா, நீலாம்பரி
பாடல்:     நாதம் எழுந்ததடி – ஸ்ரீ ரஞ்சனி
படம்  :     கோபுர வாசலிலே 
                                                                                                                                                                                                     
  பாடல்:     வசந்த காலங்கள் இசைந்து – ஸ்ரீ ரஞ்சனி 
 படம் :     ரயில் பயணங்களில்
பாடல்:    மெட்டுப்போடு மெட்டுப்போடு – ஆனந்த பைரவி 
  படம்  :    டூயட்
பாடல்:    கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள் – ஆனந்த பைரவி 
படம்  :    டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள். 
                                                                                                                                                                                                     
பாடல்:    வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி – நீலாம்பரி 
படம்  :    சிப்பிக்குள் முத்து.
பாடல்:  பூவே இளைய பூவே – நீலாம்பரி 
படம்  :  கோழி கூவுது 
பாடல்:  சித்திரம் பேசுதடி என் சிந்தை – கமாஸ் 
  படம்  :  சபாஷ் மீனா
 
மனம் சார்ந்த பிரச்சனை தீர – அம்சத்வனி, பீம்பிளாஸ் 
பாடல் :  காலம் மாறலாம் நம் காதல்  – அம்சத்வனி 
படம்  :   வாழ்க்கை 
பாடல்:   சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் – பீம்பிளாஸ் 
  படம்  :   நல்லதொரு குடும்பம் 
பாடல்:   தொகை இளமயில் ஆடி வருகுது – அம்சத்வனி 
  படம்  :   பயணங்கள் முடிவதில்லை
பாடல்:   வா…வா…வா… கண்ணா வா – அம்சத்வனி 
படம்  :   வேலைக்காரன் 
பாடல்:    இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை – பீம்பிளாஸ் 
  படம்  :    திருவிளையாடல் 
பாடல்:    பன்னிரு விழிகளிலே பணிவுடன் 
  படம்  :    சீர்காழி கோவிந்தராசன் பக்திப்பாடல்கள் 
பாடல்:   அழகென்ற சொல்லுக்கு முருகா
  படம்  :   டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள் 
பாடல்:   வாராய் நீ வாராய் 
  படம்  :  மந்திரி குமாரி 
 இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – சந்திரக கூன்ஸ்
நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – பகாடி,ஜகன் மோகினி 
பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம்-அடான 
பாடல்:  யார் தருவார் இந்த அரியாசனம் – அடான 
படம்  :  சரஸ்வதி சபதம் 
பாடல்:  வருகிறார் உனைத் தேடி – அடான 
படம் :  அம்பிகாபதி 
மனதை வசீகரிக்க, மயக்க – ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா
பாடல் :  தானா வந்த சந்தனமே – கரகரப்பிரியா 
படம்   : ஊருவிட்டு ஊரு வந்து 
பாடல் : கம்பன் எங்கே போனான் – கரகரப்பிரியா 
படம்  :  ஜாதிமல்லி 
பாடல்:  மெட்டுப்போடு மெட்டுப்போடு –ஆனந்த பைரவி 
படம்  :  டூயட் 
பாடல்:  சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா – கரகரப்பிரியா
படம்  :  அழகன் 
*பாடல்:  மாதவிப் பொன் மயிலாள் – கரகரப்பிரியா 
படம் :  இருமலர்கள் 
சோகத்தை சுகமாக்க – முகாரி , நாதநாமக்கிரியா 
*பாடல்:  கனவு கண்டேன் நான் – முகாரி 
படம்  :  பூம்புகார் 
*பாடல்:  சொல்லடி அபிராமி 
படம்  :  ஆதிபராசக்தி 
பாடல்:  எந்தன் பொன் வண்ணமே அன்பு 
படம்  :  நான் வாழவைப்பேன் 
பாம்புகளை அடக்குவதற்கு – அசாவேரி ராகம் 
வாயுத்தொல்லை தீர – ஜெயஜெயந்தி ராகம்
வயிற்றுவலி தீர – நாஜீவதாரா 
 எந்த நேரத்தில் என்ன பாட்டு கேட்க வேண்டும் ?
திருவெண்காடு டி.தண்டபாணி தேசிகர் எந்த நேரத்தில் என்ன ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கலாம் என்று ஒரு வரையறை கூறுகிறார்.
நேரம் ,ராகம் ;
5-6 மணி (காலை நேரம்) பூபாளம் 
6-7  மணிக்கு பிலஹரி 
7-8 மணிக்கு தன்யாசி 
8-10 மணிக்கு ஆரபி, சாவேரி 
10-11 மணிக்கு மத்யமாவதி 
11-12 மணிக்கு மனிரங்கு 
12-1  மணி (மதிய நேரம்) ஸ்ரீராகம் 
1-2 மணிக்கு மாண்டு 
2-3 மணிக்கு பைரவி, கரகரப்பிரியா 
3-4 மணிக்கு கல்யாணி, யமுனா கல்யாணி 
4-5 மணிக்கு (மாலை நேரம்) 
காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம் ,
இப்படியான பல ராகங்கள், மனிதனுக்குள் இருக்கும் பல்வித நோய்களைக் குணப்படுத்துகிறது. இங்கே குறிப்பிட்டுள்ள ராகங்களின் அடிப்படையிலான  பாடல்களையும், இசைகளையும் கேட்டு நோயாளிகள் தங்கள் நோய்களைக் குணப்படுத்த வேண்டும். பாட்டைக் கேட்டல் நோய் தீரும் என்பது கரும்பு தின்னக் கூலியா என்பது போல, நம் உடல் நலமும், மன நலமும் நம்மிடம் உள்ளது. நம் நோய்க்கான மருந்து இந்த ராகங்களில் உள்ளது. இனியாவது இருக்கமானவர்கள் இனிமை கூட்டும் பாடல்களையும், இசைகளையும்  ரசிப்பார்கள், கேட்பார்கள், அமைதி பெறுவார்கள்  என்பதில் எனக்கு ஐயமில்லை.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo