Onetamil News Logo

தூத்துக்குடியில் வருகிற 27ம் தேதி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் :குரும்பூரில் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், சிலம்பம், ஒயிலாட்டம் வழங்கி சிறப்பு வரவேற்பு   

Onetamil News
 

தூத்துக்குடியில் வருகிற 27ம் தேதி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் :குரும்பூரில் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் தமிழன்டா கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், சிலம்பம், ஒயிலாட்டம் வழங்கி சிறப்பு வரவேற்பு   


தூத்துக்குடி 2021 பிப்ரவரி 25 ; தூத்துக்குடியில் வருகிற 27ம் தேதி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் :குரும்பூரில் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், சிலம்பம்,ஒயிலாட்டம் வழங்கி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. 
வருகிற 27ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு தலைவர் ராகுல்காந்தி தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வருகை தருகிறார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி வ.உ.சி கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் 20 நிமிடம் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
அதன் பின்னர் 11.45 மணிக்கு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள குரூஸ் பர்னாந்து சிலைக்கு முன்பு நடைபெறும் முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். 
இதனைத் தொடர்ந்து அவர் கோவங்காடு அருகே உள்ள உப்பளத்தில் வைத்து உப்பள தொழிலாளர்களுடன் கலந்துரையாடல். வைத்து உப்பளத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் முடிந்தவுடன் அவர்களுடன் மதிய உணவு அருந்துகிறார். 
பின்னர் 1.00மணிக்கு கிளம்பி ஸ்பிக் நகர், பின்னர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முக்காணியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குரும்பூர், ஆழ்வார் திருநகரி, நாசரேத், சாத்தான்குளம் வழியாக பின்னர் நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo