Onetamil News Logo

நம்பர் 1 ரஜினி,  நம்பர் 2 விஜய், நம்பர் 3

Onetamil News
 

நம்பர் 1 ரஜினி,  நம்பர் 2 விஜய், நம்பர் 3


அஜித் - தமிழ்ப் படங்களின் டீஸர்களைப் பொறுத்தவரை இதுவரை ரஜினி நடித்த 'கபாலி' படத்தின் டீஸர்தான் முதலிடத்தில் இருக்கிறது. 
சென்னை அக்டோபர் 6 ;தமிழ்ப் படங்களின் டீஸர்களைப் பொறுத்தவரை இதுவரை ரஜினி நடித்த 'கபாலி' படத்தின் டீஸர்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதாவது கபாலி படத்தின் டீஸரை இதுவரை 34 மில்லியன்களுக்கு மேலான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
கபாலிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது என்ன படம் தெரியுமா? விஜய் நடித்து வரும் 'மெர்சல்'தான். கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி யு ட்யூபில் வெளியான 'மெர்சல்' படத்தின் டீஸர் தற்போது இரண்டரை கோடிக்கும் மேலான ஹிட்ஸைப் பெற்றுள்ளது.
அதுமட்டுமல்ல, உலகளவில் எந்த டீஸருக்கும் கிடைக்காத அளவுக்கு 9 லட்சத்திற்கும் அதிகமான 'லைக்ஸை'யும் பெற்றிருக்கிறது. மெர்சல் படத்தின் டீஸரை இதுவரை 25 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளதால் அப்படம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் டீஸர் 22 மில்லியன் ஹிட்ஸ் உடன் 3 ஆவது இடத்திலிருக்கிறது. வேதாளம் சாதனையை தெறியில் முறியடித்தனர் விஜய் ரசிகர்கள். தெறி சாதனையை விவேகம் முறியடிக்க, இப்போது விவேகம் சாதனையை பின்னுக்குத் தள்ளிவிட்டிருக்கிறது விஜய்யின் 'மெர்சல்'.
 
நமது நிருபர் ---- ஆ.மா.அருண் விஜய் காந்தி
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo