Onetamil News Logo

பரமக்குடியில் செப்.11 ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் ;இன்று முதல் 144தடை உத்தரவு அமல்!

Onetamil News
 

பரமக்குடியில் செப்.11 ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் ;இன்று முதல் 144தடை உத்தரவு அமல்!


பரமக்குடி, 2019 செப் 8: ராமநாதபுரம் மாவட்டத்தில்  உள்ள பரமக்குடியில் செப்.11 ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் ;இன்று முதல் 144தடை உத்தரவு அமல்!!ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.11 ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம், கமுதி பசும்பொன்னில் அக்.30ல் தேவர் குரு பூஜை கடைபிடிக்கப்படுகிறது. இந்த இரண்டு நினைவிடங்களுக்கு வந்து செல்லும் வாகனங்களை முறைப்படுத்தல் தொடர்பாக பல்வேறு சமுதாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஆக.29 ஆம் தேதி நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி இரண்டு நிகழ்வுகளிலும் பங்கேற்க வருபவர்கள் வாடகை வாகனங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பொருட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.9) முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதன்படி இன்று  (செப்.9) முதல் செப்.15 வரை, அக்.25 முதல் அக். 31 வரை தடை உத்தரவு அமலில் இருக்கும்.
இக்கால கட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo