Onetamil News Logo

இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹஜ் பெருநாளின் முக்கியத்துவத்தை  மாணவர்களுக்கு உணர்த்துவதற்காக "இஹ்ராம் தினம்" 

Onetamil News
 

இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹஜ் பெருநாளின் முக்கியத்துவத்தை  மாணவர்களுக்கு உணர்த்துவதற்காக "இஹ்ராம் தினம்" 


 இராமநாதபுரம் 2019 ஆகஸ்ட் 14 ;இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில்  இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹஜ் பெருநாளின் முக்கியத்துவத்தை  மாணவர்களுக்கு உணர்த்துவதற்காக "இஹ்ராம் தினம்" கொண்டாடப்பட்டது.முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியா புனித  மக்கா நகரில் உள்ள கஃபா என்ற இறை இல்லத்தை தரிசித்து புனித பயணம் மேற்கொள்வதாகும்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் பனித  ரமலான் பெருநாளை அடுத்து  ஹஜ்ஜூப் பெருநாள் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
புனித ஹஜ் யாத்திரை கடமையை ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில்  ஒருமுறையாவது நிறைவேற்ற வேண்டும்.
ஹஜ் புனித யாத்திரையை உலகமெங்கும் உள்ள முஸ்லிம்கள் உணவு, உடை,மொழி,நிறம்,கலாச்சார வேற்றுமையின்றி ஒன்று கூடி தொழுது இறைவணக்கம் செய்வார்கள்.அதன் அடிப்படையில்  இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில்  இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹஜ் பெருநாளின் முக்கியத்துவத்தை  மாணவர்களுக்கு உணர்த்துவதற்காக "இஹ்ராம் தினம்" கொண்டாடப்பட்டது.
இதில் மாணவர்கள் ஹஜ் யாத்தரை செய்பவர்களைப் போல் (இஹ்ராம்) வெண்ணிற ஆடை அணிந்து மக்காவில் உள்ள  கஃபாவை தவாஃப் செய்வதை போல் அரபி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து செய்த கஃபாவை மாணவர்கள் ஆர்வத்துடன் தவாஃப் செய்தார்கள்.
அரபி ஆசிரியர்களான ,ஜப்பார் யூசுஃபி,காஸிம் யூசுஃபி , ஜிஃப்ரி ஜமாலி,
பெண் ஆசிரியர்கள் சஃப்ரினா ஆலிமா, சபீனா ஆலிமா, நுஸ்ரத் ஆலிமா ஆகியோர் விழா ஏற்பாட்டிணை செய்திருந்தனர்.
பள்ளியின் முதன்மை மேலாளர் ஜஃபர் சாதிக் மற்றும் முதல்வர் மருதாசலபூபதி ஆகியோரின் முன்னிலையில் மாதிரி புனித  ஹஜ் யாத்திரை விழா  சிறப்பாக நடைபெற்றது.
மாணவ மாணவியர்  மாதிரி புனித ஹஜ் யாத்திரீகர் போல உடையணிந்து ஹஜ் யாத்திரையில் ஓதப்படும் இறை போதனைகளை முழங்கியது காண்போரை கவர்ந்தது.
One Tamil News செய்திகளுக்காக  முகவை அப்துல்லாஹ்..!
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo