Onetamil News Logo

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தூத்துக்குடி தம்பதியினர் ராமநாதபுரத்தில் உயிரிழப்பு 

Onetamil News
 

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தூத்துக்குடி தம்பதியினர் ராமநாதபுரத்தில் உயிரிழப்பு 


இராமநாதபுரம் 2019 ஆகஸ்ட் 11 ;ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பிள்ளையார்குப்பம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தம்பதி உயிரிழந்துள்ளனர்..
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே திட்டங்குளம் - பிள்ளையார் குளம் கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சுசூகி ப்ரீஸா காரில் பயணம் செய்த கொம்பூதி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் அவர் மனைவி மற்றும் காரில் சென்றபோது திடீரென டயர் வெடித்ததில் மூன்று முறை கார் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பாலமுருகன் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவருடைய மனைவி சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 
பலியான பாலமுருகன் தூத்துக்குடி தெர்மல்நகரில் எஸ்.டி.கார்க்கோ மேனேஜராக பணியில் இருந்துள்ளார்.கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானதில் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி உயிரிழந்துள்ளனர்.மேலும் விபத்தில் காயமடைந்த ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர்.விபத்துக்கு உள்ளானவர்கள் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo