Onetamil News Logo

தூத்துக்குடி முத்துக்குளிக்கும் தொழிலாளி பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டும் பணியின் போது ஆழ்துளை குழியில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு

Onetamil News
 

தூத்துக்குடி முத்துக்குளிக்கும் தொழிலாளி பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டும் பணியின் போது ஆழ்துளை குழியில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு


தூத்துக்குடி 2020 ஜூலை 13 ;தூத்துக்குடி முத்துக்குளிக்கும் தொழிலாளி பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டும் பணியின் போது ஆழ்துளை குழியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமேஸ்வரம் பாம்பன் கடல்பகுதியில் புதிய ரயில் பாலம் அமைக்க 250 கோடி ரூபாயை ஒதுக்கி, கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர். அதன் பின்னர் பாம்பன் கடலில் உப்புத்தன்மை உள்ளிட்டவை குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் பழைய பாம்பன் பாலத்தின் இடது புறம் புதிய பாலம் கட்டும் பணி நடந்துவந்தது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் ப்ரிட்ஜ் கட்டுமான நிறுவனம் இந்த பணியினை மேற்கொள்கிறது. சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 60 அடிக்கு ஒரு தூண் என மொத்தம் 99 தூண்களுடன் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் இந்த பணி நடைபெறும் என்றும் பாலத்தின் மையப்பகுதியில் 27 மீட்டர் உயரத்திற்கு தூக்கு பாலம் பணிகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக கடலுக்கு அடியில் ஆழ்துளையிடப்பட்ட குழிகளில் தூண்கள் அமைப்பதற்காக இரும்பு உருளைகள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடலுக்கு அடியில் மூழ்கி இந்தப் பணியைச் செய்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடலில் முத்துக்குளிக்கும் மீனவத் தொழிலாளிகள் வரவழைக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இந்த நிலையில்  புதிய ரயில் பாலம் கட்டும் பணிகளுக்காக நடுக்கடலில் தோண்டப்பட்ட ஆழ்துளை குழியில் பணியிலிருந்த போது இன்று திங்கட்கிழமை கடலில் ராட்சத ஆழ்துளையிடும் இயந்திரத்தின் பாகம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட 100 அடி ஆழமுள்ள குழிக்குள் சிக்கியது. இதனை எடுப்பதற்காக குழிக்குள் ஆக்சிஜன் வசதியுடன் முத்துகுளிக்கும் மீனவர்களான சகாய ஊர்சோன் (53) சத்தியநாதன், அமர் ஆகிய மூவரும் ஈடுபட்டிருந்தனர்.
இதில் சத்தியநாதன், அமர் ஆகிய இருவர் மட்டும் 15 நிமிடங்களில் மேலே வந்துள்ளனர். வெகுநேரமாகியும் சகாய ஊர்சோன் மேலே வரவில்லை. தொடர்ந்து குழியிலிருந்து மூச்சுத் திணறி வாயில் ரத்தம் படிந்த காயத்துடன் மயக்கநிலையில் சக பணியாளர்களால் மீட்டனர்.உடனே அவர் அங்கிருந்து பாம்பன் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்த பின் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.உடல் பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்டபம் மெரைன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo