குறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.!
எங்கு பார்த்தாலும் துப்பாட்டாவால் முகத்தை மூடிய பெண்கள், கர்சீப்பை அல்லது தொப்பியை மாட்டிக்கொண்ட தலைமறைப்புகளுடன் ஆண்கள் - இதெல்லாம் மண்டைய பொளக்கும் வெயில் காலம் ஆரம்பமாகி விட்டது என்பதை நமக்கு வெளிப்படையாய் உணர்த்தும் அறிகுறிகளாகும்.
வெயிலுக்கு பயந்து காலையில் பொழுதோடு எழுந்து பணிகளுக்கு ஓடுவதும், ஆபிஸில் ஏசி இருந்தால் அங்கேயே கொஞ்சம் நேரம் உட்காந்துவிட்டு தாமதமாக வீடு திரும்புவதும், இனி சகமான காரியங்களாகும். வீட்டில் ஒரு ஏசி இருந்தால் நல்லாத்தான் இருக்கும் ஆனால் பட்ஜெட் சிக்கல், மின்சார கட்டணம் சிக்கல் என கழுத்தை நெருக்கும் பல பிரச்சனைகள் அதில் உள்ளதே தப்பிக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்டால் எண்களின் பதில் -
வங்கதேசத்தை சேர்ந்த அஷிஸ் பால் - என்பவர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்தி மின்சாரம் இல்லாமல் செயல்படும் ஒரு வகையான ஈகோ கூலர் (Eco cooler) குளிர்சாதன பெட்டியை வடிவமைத்தவர் ஆவார்.
இவர் வடிவமைத்துள்ள இந்த 'சாதனம்' ஆனது முற்றிலும் மின்சாரம் இன்றி இயங்கும் இந்த குளிர்சாதன பெட்டியாகும். மிகவும் குறைந்த அளவிலான செலவில் இதை உருவாக்கலாம் என்று விளக்கும் அஷிஸ் பால் இதற்கு ஈகோ கூலர் என்றும் பெயரிட்டுள்ளார்.
நாம் பள்ளிக்காலங்களில் அறிவியல் புத்தங்கங்களில் படித்த உள்நுழையும் காற்றானது விரிவடையும் போது குளிராவது தான் இந்த ஈகோ கூலர் கருவியின் அடிப்படை அறிவியல் தந்திரமாகும்.
வெயிலில் இருந்து தப்பிக்க மிகவும் குறைந்த செலவில் உருவாக்கம் பெறும் இந்த குளிர்சாதன பெட்டியானது, கண்டறியப்பட்ட பொழுதே வங்கதேசம் முழுக்க சுமார் 25,000 வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்போது அதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கலாம்.
வீட்டில் வை-பை கனெக்ஷன் மக்கர் பண்ணுதா..?! சரி செய்ய எளிமையான டிப்ஸ்.! வீட்டில் வை-பை கனெக்ஷன் மக்கர் பண்ணுதா..?! சரி செய்ய எளிமையான டிப்ஸ்.!
ஜியோவை சமாளிக்க ரூ.42/-க்கு பிஎஸ்என்எல் அதிரடி திட்டம்.! ஜியோவை சமாளிக்க ரூ.42/-க்கு பிஎஸ்என்எல் அதிரடி திட்டம்.!
மோட்டோ G5 ஸ்மார்ட்போனும் நடுத்தர வகை ஆண்ட்ராய்டு போன்களும் மோட்டோ G5 ஸ்மார்ட்போனும் நடுத்தர வகை ஆண்ட்ராய்டு போன்களும்
பயன்பாடுகளுக்கு ஏற்ப பயனளிக்கும் இந்த ஈகோ கூலர் கருவியானது சாதாரண வெப்ப அளவு கொண்ட அறையினுள் வெப்பநிலையை சுமார் 5 டிகிரி வரை குறைக்கும் திறன் கொண்டுள்ளது.
கொடுமையான வெயிலில் இருந்து மின்சாரமின்றி 5 டிகிரி அளவில் தப்பிக்க முடியும் என்பதற்காகவே இக்கருவியை பாராட்ட வேண்டும் மற்றும் இது எப்படி வேலை செய்கின்றது என்பதை மிகவும் எளிமையாக வாய் மூலம் காற்றை ஊதி மறுபக்கம் குளிர்ச்சியை கையில் உணர முடியும்.
அந்த எளிமையான அறிவியல் முறையில் தான் பிளாஸ்டிக் பாட்டில்களில் காற்றை அழுத்தி உள்ளே அனுப்புவதால் காற்று குளிர்விக்கப்படுகின்றது - இவ்வளவு தான் ஈகோ கூலர்.!
பிளாஸ்டிக் பாட்டில்களை மண்ணுக்குள் புதைய விடமால் செய்த மாதிரியும் ஆகிற்று, உடன் நமக்கே நமக்கான ஒரு ஏர் கூலரையும் உருவாக்கிடலாம். ஆர்வமும் உலக வெப்படமடைதல் சார்ந்த அக்கறையும் இருந்தால் இதை உருவாக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் மரங்களை நடுங்கள் உடன் பிளாஸ்டிக்குகளை அறவே தவிர்த்திடுங்கள்.!