Onetamil News Logo

திருநெல்வேலி மாவட்டத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச நாள் அனுசரிப்பு

Onetamil News
 

திருநெல்வேலி மாவட்டத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச நாள் அனுசரிப்பு


திருநெல்வேலி 2020 அக்டோபர் 16 ;பேரிடர் காலங்களில் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் பொருட்டு சர்வதேச பேரிடர் அபாயக்குறைப்பு நாளாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13 ம் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி  கூகிள் மீட் செயலி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தாசில்தார் திருப்பதி அவர்கள் விளக்கம் அளித்தார். பேரிடர் காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை பாதுகாப்பது குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் ரவிமுருகன் அவர்கள் விளக்கம் அளித்தார். பேரிடர் காலங்களில் செய்ய வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்து இந்திய சென்சிலுவை சங்கத்தின் முதன்மை பயிற்சியாளர் பிலித் சுதர் அவர்கள் விளக்கினார். மேலும் தன்னார்வலர்கள் பணி செய்வதற்கான வரைமுறைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து இந்திய சென்சிலுவை சங்கத்தின் நாங்குநேரி பகுதி செயலாளர் சபேசன் அவர்கள் கூறினார். இந்நிகழ்ச்சியில் APA கல்லூரி, நான்குனேரியில் பயிலும் NSS மாணவர்கள், கால்நடை மருத்துவ கல்லூரியில் பயிலும் NSS மாணவர்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வரும் நாட்களில் செயல் முறை விளக்கங்கள் மூலம் பயிற்சி அளிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo