Onetamil News Logo

திருச்செந்தூர் நாட்டார் மருத்துவர் சங்கத்தில் கோவில் கொடை விழா நடத்துவது  குறித்து அனுமதி கேட்டு கோரிக்கை 

Onetamil News
 

திருச்செந்தூர் நாட்டார் மருத்துவர் சங்கத்தில் கோவில் கொடை விழா நடத்துவது  குறித்து அனுமதி கேட்டு கோரிக்கை 


                                                            

திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள நாட்டார் மருத்துவர் சங்கத்தில் கோவில் கொடை விழா நடத்துவது  குறித்து அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.                                                                                                இதுகுறித்து திருச்செந்தூர் நாட்டார் மருத்துவர் மடத்தினர் சங்கம் செயலாளர் சுடலைமணி தாசில்தாருக்கு வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியதாவது...எங்கள் சங்கத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பணிவிடை செய்யவும், திருமுருக பக்தர்களுக்கு தொண்டாற்றுவதுமாக செயல்பட்டு வரும் பதிவு பெற்ற சங்கமாகும், எங்கள் சங்கத்தைச் சார்ந்த நபர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள் அனைவரும் தொடர்ந்து சங்கத்திற்கு பெருத்த இடையூறு செய்து வருகிறார்கள். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டார் மருத்துவர் சங்கத்தினருக்கு பாத்தியப்பட்ட திருச்செந்தூர் தேரடி மாடன் திருக்கோவிலுக்கு இன்று கால்நாட்டு விழாவும் அதனை தொடர்ந்து வரும் 12ம் தேதி கோவில் கொடை விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறோம், ஆகையால் பாதுகாப்பு கேட்டிருக்கிறார்கள்,இந்த நிகழ்வில் மடத்தின் நிர்வாகிகள் தலைவர் பி பெரியசாமி, செயலாளர் என் சுடலை மணி, பொருளாளர் வயன பெருமாள், துணைத் தலைவர் பி ஆத்திக்கண்ணு மற்றும் சங்க உறுப்பினர் எம் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 
                 கோவிலுக்கு எதிராக செயல்படக்கூடிய ஆறுமுகம் மகன் செல்வன் என்ற செல்வன் மிக்கேல் செல்லையா மகன் ஆறுமுகம் ஆறுமுகம் மகன் கேசவன் ஆறுமுகம் மகன் பகவத்சிங் ஆகியோர் மீது குற்றம் சாட்டு இருக்கிறார்கள் மாவட்ட போலீஸ் எஸ் பி இடம் வருவாய் கோட்டாட்சியர் தாசில்தார் போன்றோருக்கு புகார் மனு அனுப்பி இருக்கின்றனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo