Onetamil News Logo

சென்னையில் மாற்றுத் திறனாளியை ஏமாற்றி நில அபகரிப்பு செய்ய முயலும் அதிமுக பிரமுகர் வெத்தலை மாரி,ராம் தேவ் ,மோகன்லால் சேட்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பீர்களா முதலமைச்சருக்கு கோரிக்கை

Onetamil News
 

சென்னையில் மாற்றுத் திறனாளியை ஏமாற்றி நில அபகரிப்பு செய்ய முயலும் அதிமுக பிரமுகர் வெத்தலை மாரி,ராம் தேவ் ,மோகன்லால் சேட்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பீர்களா முதலமைச்சருக்கு கோரிக்கை


 சென்னையில் மாற்றுத் திறனாளியை ஏமாற்றி நில அபகரிப்பு செய்ய முயலும் அதிமுக பிரமுகர் வெத்தலை மாரி,ராம் தேவ் ,மோகன்லால் சேட்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பீர்களா முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.                                                                                  100 சதவீதம் ஓனம் கொண்ட மாற்றத்திறனாளி நாராயணன் அவர்களுடைய வீட்டை முறைகேடாக நம்பிக்கை மோசடி செய்து அபகரிக்க முயலும் அதிமுக நிர்வாகி வெத்திலை மாரி தொழிலதிபர்கள் ராம் தேவ் சேட் மற்றும் அவரது மகன் மோகன்லால் சேட் ஆகியோர் மீது நில அபகரிப்பு பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளியை தற்கொலை செய்ய தூண்டுதல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்                                                                                                                   இது குறித்து சென்னையில் உள்ள தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகசுந்தரம் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள புகார் மனு   ;சென்னை ஆதியப்ப நாயக்கன் தெருவில் வசித்து வருபவர் நாராயணன் இவர் பிறவி முதலில் 100 சதவீதம் ஊனத்துடன் பிறந்த மாற்றுத்திறனாளி ஆவார் இவருக்கு சொந்தமான  வீட்டை அப்பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் வெத்திலை மாரி  தொழிலதிபர்கள்  ராம் தேவ் சேட் மற்றும் மோகன்லால் சேட் ஆகிய கூட்டாக சதித்திட்டம் தீட்டி நம்பிக்கை மோசடி செய்து வீட்டை அபகரிக்க நினைக்கின்றனர். தற்போது மாற்றுத்திறனாளி நாராயணன் கைவசம் இருக்கின்ற வீட்டை மார்வாடி தொழிலதிபர்கள் தங்கள் பணபலம் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நாராயணன் மீது காவல்துறை உதவியுடன் பொய் வழக்கு பதிவு செய்து அவரை அவரது வீட்டை விட்டு குண்டு கட்டாக தூக்கி எறிய முயன்று வருகின்றனர். சிவில் தகராறு தொடர்பான இவ்விடயத்தை கிரிமினல் ஆக்குவதற்கு சேட்டுகள் முயன்று வருகினர். சட்டத்துக்கு புறம்பான அநீதியான செயலில் காவல்துறை ஈடுபடாமல் சட்டப்படி நீதிமன்ற மூலம் நீதி பெற்றுக் கொள்ள மேற்படி நபர்களுக்கு காவல்துறை வலியுறுத்த வேண்டும் மேற்படி விபரம் வீடு இவரிடம் இருந்து பறிக்கப்பட்டால் அவரின் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நாராயணனின் அண்ணன் ஆகியோர் நடுத்தெருவுக்கு வந்து பிச்சை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் ஏற்கனவே கடும் மன உளைச்சல் ஏற்பட்டு விரக்தியில் இருக்கும் மாற்று திறனாளி நாராயணன் என்பவர் ஏதாவது ஒரு விரதத்தில் தற்கொலை முயற்சிகள் மேற்கொண்டால் வெத்தலை மாறி ராம்தேவ் செட் மோகன்லால் செட் ஆகியோரே பொறுப்பு நில மோசடி மாபியாக்கள் மீது உடல் ஊனங்கள் கொண்ட நபர்களின் உரிமைகள் சட்டம் 2016 கீழ் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo