தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் புலவர் முத்துசாமி எழுதிய கவிதைப் பூஞ்சோலை நூல் வெளியீடு மற்றும் நூல் ஆய்வு நிகழ்வு
தூத்துக்குடி 2023 செப் 10; தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் புலவர் முத்துசாமி எழுதிய கவிதைப் பூஞ்சோலை நூல் வெளியீடு மற்றும் நூல் ஆய்வு நிகழ்வு சித்திரைக்கூடம் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு காப்பீட்டு சேவை மைய ஆலோசகர் தனசேகர் வரவேற்புரை வழங்கினார். தொடுவானம் கலை இலக்கிய பேரவை தலைவர் நெல்லை தேவன் உரையாற்றினார்.
கவிஞர்,வானொலி நாடக நடிகர்,திரைப்பட நடிகர்,கட்டுரையாளர்,பட்டி மன்ற வழக்காடு மன்ற பேச்சாளர்,ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் புலவர் முத்துசாமி எழுதிய கவிதைப் பூஞ்சோலை நூலை சரவணாஸ் ஹோட்டல் உரிமையாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட சுபா கிராபிக்ஸ் உரிமையாளர் சுப்புராஜ் பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி வீதி நாடக கலைஞர் சக்திவேல் நூல் ஆசிரியர் பற்றி அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்வில் தொடுவானம் கலை இலக்கிய பேரவை செயலாளர் கவிஞர் மாரிமுத்து,ஓய்வு பெற்ற ஆசிரியர் பத்மநாதன் ஆகியோர் நூல் குறித்து ஆய்வு செய்து விரிவுரை வழங்கினார்கள்.
நிகழ்வில் நூலாசிரியர் புலவர் முத்துசாமி ஏற்புரை வழங்கினார். இந்த விழாவில் செல்வின்,எழுத்தாளர் முகமது யூசுப், வெள்ளுவன், முத்துநகர் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் முருகேசன், செயலாளர் அருந்ததி அரசு, குறும்பட இயக்குனர் மஜீத் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.