ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு தற்போது 6850 கோடி ரூபாய்,வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளோடு பதவியில் அமருகிறார்.
ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு தற்போது 6850 கோடி ரூபாய் (730 மில்லியன் பவுண்டுகள்) என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினார்களிலேயே அதிக செல்வம் உடையவராக உள்ளார். பிரித்தானிய பேரரசின் (UK) அரசரான சார்லசின் ஆபரணங்கள் தவிர்த்த சொத்து மதிப்பை விட இரண்டு மடங்கு சொத்து மதிப்பு இவருடையது.
ரிஷி சுனக் தனது முழுமையான சொத்துக்களை அறிக்கையிடாமல், தன் பெயரிலும் தன் மனைவி பெயரிலும் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை மறைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் தற்போது எழுகின்றன. இத்தகைய வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளோடு நாம் அதிகம் கவனிக்க வேண்டியது அரசியலில் இவர் கொண்டுள்ள வலதுசாரி கண்ணோட்டமே.
கடந்த ஜூலை மாதம் நெருக்கடியின் போது ரிஷி சுனக் தனது நிதியமைச்சர் பதவியை முதலில் ராஜினாமா செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து பல அமைச்சர்கள் வெளியேறினர். இறுதியில் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு, தன்னை வளர்த்துவிட்டவரையே முதுகில் குத்தியவர் தான் ரிஷி சுனக்.
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழையபடி கொண்டு செல்ல கடுமையான முடிவுகள் எடுப்பேன் என்கிறார் ரிஷி சுனக். ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்த ஜெரமி கோர்பைன் உட்பட பலர், இது 1% செல்வந்தர்களை காப்பாற்ற 99% மக்கள் பொருளாரத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளிவிடும் என்கின்றனர்.
சீக்கியர்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர் பிரீத்தி படேல். இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் பதவியில் இருந்த பிரீத்தி படேல் ஆர்.எஸ்.எஸ்.-ன் வெளிப்படையான ஆதரவாளர் என்று தெரிந்தும் அவரை ஆதரித்தவர் ரிஷி சுனக். பிரிட்டன் பொருளாதாரம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறதோ, அதைவிடவும் மோசமாக உள்ளது பிரிட்டன் அரசியல். 45 நாளில் லிஸ் ட்ரஸ் பிரிட்டன் நாட்டின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டு ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அடுத்தப் பிரதமர் யார் என்ற பேட்டியில் போரிஸ் ஜான்சன் ஞாயிற்றுக்கிழமை வெளியேறியேறினார், பென்னி மோர்டான்ட் வெறும் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்த நிலையில் போட்டியின்றி ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ஆகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பிரிட்டன் அரசர் சார்லஸ் உடனான சந்திப்பிற்குப் பின்பு ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ஆனார். இந்த நிலையில் ரிஷி சுனக் முன்பு பல சவால்கள் காத்திருக்கிறது. இதை எப்படி ரிஷி சுனக் சமாளிக்கப்போகிறார் என்பதில் தான் அவருடைய உண்மையான திறன் தெரியும். இப்படி என்ன சவால்கள் உள்ளது..?
பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்.. கடைசி நேரத்தில் போரிஸ் ஜான்சான் விலகல்..! பொருளாதாரம் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் தற்போது பல வருட உச்ச அளவான 10 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் மக்கள் வாங்கும் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. ரெசிஷன் தற்போதைய நிலையில் பிரிட்டன் அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நாணய கொள்கையை இறுக்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் கட்டாயம் பிரிட்டன் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழைந்துவிடும். இதேவேளையில் பிரிட்டன் பொருளாதாரம் மீண்டு வர ரிஷி சுனக் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வரி உயர்வு நடைமுறைப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. மினி பட்ஜெட் லிஸ் ட்ரஸ் போலவே ரிஷி சுனக்-ம் தனது உயர்மட்ட நிர்வாகக் குழுவை நியமித்த பின்பு மினி பட்ஜெட் வெளியிடுவார். இதை அடிப்படையாக வைத்து தான் பிரிட்டன் பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீட்டு சந்தை, வர்த்தகம், பவுண்ட் மதிப்பு ஆகியவை இருக்கும். எனவே ரிஷி சுனக் தலைமையிலான பிரிட்டன் அரசின் மினி பட்ஜெட் மிகவும் முக்கியமானதாக உள்ளது. எனர்ஜி பிரச்சனை ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை துவங்கிய நாளில் இருந்து பிரிட்டன் நாட்டில் அனைத்து வகையான எரிபொருளும் விலை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாகக் கடந்த ஆண்டு ஒரு பிரிட்டன் குடும்பத்தின் வருடாந்திர எனர்ஜி செலவுகள் 1277 பவுண்ட் ஆக இருந்த நிலையில் தற்போது 3549 பவுண்ட் ஆக உயர்ந்துள்ளது. குளிர்காலம் குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கட்டாயம் முக்கியமான முடிவை விரைவில் எடுத்தாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு மின் பட்ஜெட் அறிக்கையில் வருமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. லிஸ் டிரெஸ் அரசு முன்னாள் லிஸ் டிரெஸ் அரசு ஏப்ரல் வரையில் எனர்ஜி செலவுகள் வருடாந்திர அடிப்படையில் 2500 பவுண்ட் வரும் வரையில் ப்ரீபெய்டு செய்வதாக அறிவித்தது. இந்த அளவீட்டை ரிஷி சுனக் கூடுதலாகக் குறைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அரசியல் பிரச்சனை போரிஸ் ஜான்சன் துவங்கி, லிஸ் ட்ரஸ் வரையிலான ஆட்சி காலத்தில் ரிஷி சுனக் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியில் அரசியல் பிளவுகள் அதிகமாகியுள்ளது, இதனால் பிரிட்டன் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக எதிர்க்கட்சியாக இருக்கும் லேபர் கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அரசியல் அனுபவம் இதை எப்படியாவது கட்டுப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் ரிஷி சுனக் உள்ளார். ரிஷி சுனக்கிற்கு நிதியியல் உலகில் அனுபவம் இருந்தாலும் அரசியலில் வெறும் 7 வருட அனுபவம் மட்டுமே உள்ளது. மருத்து வசதிகள் பிரிட்டன் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் மக்களுக்குப் போதுமான மருத்துச் சிகிச்சை மற்றும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்க ரிஷி சுனக் முதல் நாளில் இருந்தே பணியாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் ரிஷி சுனக் NHS savings பிரிவுக்குக் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். யூனியன் ஊழியர்கள் போராட்டம் பிரிட்டன் நாட்டின் பல்வேறு ஊழியர்கள் யூனியன் அமைப்புகள் போதிய ஊதியம் கிடைப்பது இல்லை என்றும், தற்போது கிடைக்கும் வருமானம் விலைவாசி உயர்வை சரிக்கட்ட முடியவில்லை எனப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தப் பிரச்சனைகளையும் கட்டாயம் விரைவில் ரிஷி சுனக் சரி செய்தாக வேண்டும்.