Onetamil News Logo

ராக் ஸ்டார் ரமணியம்மாள் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.4) காலமானார். 

Onetamil News
 

ராக் ஸ்டார் ரமணியம்மாள் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.4) காலமானார். 


 பிரபல நாட்டுப்புறப் பாடகரும், திரைப்படப் பின்னணி பாடகருமான 'ராக் ஸ்டார்' ரமணியம்மாள் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.4) காலமானார். அவருக்கு வயது (69).                                                                                                               பிரபல பின்னணி பாடகியான ரமணியம்மாள் பரத் நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் 'தண்டட்டி கருப்பாயி' பாடலை பாடியதன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து காத்தவராயன், ஹரிதாஸ், சண்டக்கோழி -2, காப்பான் போன்ற பல படங்களில் பாடியுள்ளார். இவர் தனியார் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரை ராக் ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் அன்போடு அழைத்து வந்தனர்.மேலும், இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்நிலையில், ரமணியம்மாள் (69) வயது மூப்பு காரணமாக திடீரென காலமானார். இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo