Onetamil News Logo

ராக்கெட் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி கைது!!  சங்கரன்கோவிலில் பரபரப்பு!! 

Onetamil News
 

ராக்கெட் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி கைது!!  சங்கரன்கோவிலில் பரபரப்பு!! 


சங்கரன்கோவிலில் ராக்கெட் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி கைது செய்யப்பட்டார்.
           திருநெல்வேலி மாவட்டம் திருமால் நகரை சார்ந்த காளிமுத்து மகன் ராஜசுந்தர்(29) என்பவர் நேற்று சந்தேகத்துக்கு உட்படும் வகையில் சங்கரன்கோவில் பகுதியில் பயங்கரமான ஆயுதங்களுடன்  சுற்றி வந்ததை அறிந்த போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
                 (முதல்  தகவல் அறிக்கை number 68/23 Sankarankovil PS )விசாரணையின் போது அவர் ராக்கெட் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி என்பதும் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில் ஆள் கடத்தல் வழக்கில் ராக்கெட் ராஜாவுடன் கை துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்கள் உடன் கைதாகி சிறைக்கு சென்றவர் என்பதும் தெரிய வந்தது.
         மேலும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வரவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo