Onetamil News Logo

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜனாதிபதியாக ரோட்ரிகோ டுடேர்தே. ( Rodrigo Duterte ) பதவியேற்ற 24 மணி நேரத்தில் 110 பேர் என்கவுண்டர்,போதை மருந்து வியாபாரிகளும், சூதாட்ட கிடங்குகளும், ரவுடிகளுமாக நிறைந்திருந்த ஊரை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். 

Onetamil News
 

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜனாதிபதியாக ரோட்ரிகோ டுடேர்தே. ( Rodrigo Duterte ) பதவியேற்ற 24 மணி நேரத்தில் 110 பேர் என்கவுண்டர்,போதை மருந்து வியாபாரிகளும், சூதாட்ட கிடங்குகளும், ரவுடிகளுமாக நிறைந்திருந்த ஊரை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். 


பிலிப்பைன்ஸ் 2021 ஆகஸ்ட் 23 ; நான் பதவிக்கு வந்தால் இந்த அயோக்கியர்கள் அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுவேன் அவர்களின் பிணத்தை கடலில் தூக்கி எறிவேன். ஆயிரம் பேராகட்டும், பத்தாயிரம் பேராகட்டும் எனக்குக் கவலையில்லை" என்று தேர்தலின் போதே வெளிப்படையாகக் கூறி, பல மடங்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு வந்து அடுத்த 24 மணி நேரத்தில் 110 போதை மருந்து விற்பனையாளர்களைச் சுட்டுத் தள்ளியதன் விளைவு...!!!ஆயிரக்கணக்கான ரவுடிகளும், போதைமருந்து வியாபாரிகளும் இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு போய் காணும் இடங்களில் எல்லாம் போலீசிடமும், ராணுவத்திடமும் சரணடைகிறார்கள்...!!!
வித்தியாசமான ஒரு தலைவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக ஜூலை 1-ந்தேதி பதவியேற்ற ரோட்ரிகோ டுடேர்தே. ( Rodrigo Duterte )
"பொருளாதாரம் பற்றி எனக்குத் தெரியாது.இந்த நாட்டின் அறிஞர்களும், பொருளாதார நிபுணர்களும் அடங்கிய குழுவிடம் அந்த பொறுப்பை விட்டு விடுவேன்.என் பொறுப்பு லஞ்சம், கொலை, கொள்ளை, போதை மருந்து விற்பனை ஆகியவற்றை அடியோடு ஒழித்து பெண்கள் சுதந்திரமாக நடமாடக் கூடிய ஒரு பத்திரமான நாட்டை உருவாக்குவதே."
போதை மருந்தை உற்பத்தி செய்பவர்கள்,விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துபவர்கள் அத்தனை பேருக்கும் நான் எமனாக இருப்பேன்...!!!
சட்டமன்றங்களோ, மனித உரிமை அமைப்புகளோ என்ன சொன்னாலும் அதை நான் பொருட்படுத்தப் போவதில்லை. மக்கள் எனக்கு அளிக்கும் ஆறு ஆண்டுக் கால அவகாசத்தில் முதல் ஆறு மாதத்திலேயே, பிலிப்பைன்ஸ் நாட்டை உலகிலேயே அமைதியான, பத்திரமான இடமாக்குவதே என் லட்சியம்...!!!
அவரது இந்த வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டு தான் பிலிப்பைன்ஸ் மக்கள் தங்கள் ஜனாதிபதியாக டுடேர்தே யை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்...!!!
இந்த டுடேர்தையை அவரது மக்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள்…?கேட்கவே வித்தியாசமாக இருக்கும் அவரது பின்னணி நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று...!!!
71 வயதாகும் டுடெர்தே, பிலிப்பைன்ஸில் நாட்டுப்புறத்தில், எளிய குடும்பத்தில் பிறந்தவர். தட்டுத்தடுமாறி, உருண்டு புரண்டு எப்படியோ ஒரு வக்கீல் பட்டம் பெறும் அளவிற்கு படித்து விட்டார்...!!!
5-6 ஆண்டுகள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தவர், பின்னர் அரசியலில் நுழைந்தார். தனது ஏரியாவான மின்டனாவோவில், Davao என்கிற ஊரின் மேயராகப் பொறுப்பேற்றார். மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் அந்த ஊர் மக்களால் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டுடெர்தே, 22 ஆண்டுகளுக்கு அவரது மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டு மேயர் பதவியில் இருந்தார்...!!!
போதை மருந்து வியாபாரிகளும், சூதாட்ட கிடங்குகளும், ரவுடிகளுமாக நிறைந்திருந்த ஊரை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். குறிபார்த்து சுடக்கூடிய ஷார்ப் ஷூட்டர்களை தன் காவல் படையில் சேர்த்துக் கொண்டார். பல சமயம் அவரே தனது மோட்டார் பைக்கில், இரவு நேரங்களில் ரோந்து வருவார். கண்ணில் படும் போதை வியாபாரிகள்,ரவுடிகள் அனைவரும் குறி பார்த்து சுடப்பட்டு கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நடுத்தெருவில் வேட்டையாடப்பட்டனர். தப்பிக்க முயன்றவர்கள், பிடிபட்ட பிறகு நரக வேதனைக்கு உள்ளாயினர்...!!
அவரது பதவிக் காலத்தில் சுமார் 1400 பேர் என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர். விளைவு ஊர் சுத்தமாகியது. டுடெர்தேயின் புகழ் பிலிப்பைன்ஸ் நாடு முழுவதும் பரவியது...!!!
உலகிலேயே பத்திரமான ஊர்களில் 4வது இடமாக மின்டனாவோ-Davao நகரம் பெயர் பெற்றது...!!!
சொந்த ஊரில் அவர் நிகழ்த்திய சாதனைகளின் விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய அரசில் அமைச்சராக சேரும்படி அவருக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது. குறைந்த பட்சம் 4 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அத்தகைய அழைப்புகளை நிராகரித்தார் டுடெர்தே...!!!
இறுதியில், என்ன தோன்றியதோ தெரியவில்லை கடந்த ஆண்டு 2015 ல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் நிற்கப் போவதாக அறிவித்தார்...!!!
அவரது அறிவிப்பை கேட்டதுமே பிலிப்பைன்ஸ் நாடே பரபரப்பினால் பற்றிக் கொண்டது. கருப்பு சந்தைக்காரர்கள், லஞ்ச ஊழல் சக்கரவர்த்திகள், அரசியல்வாதிகளின் பின்னால் நிற்கும் ஊடகங்கள் அத்தனையும் அவரின் நெகடிவ் பக்கத்தை விரிவாக்கி காண்பித்தன. மக்களை பயமுறுத்தின...!!!
டுடெர்தே சட்டத்தை மதிக்க மாட்டார்.நீதிமன்றங்களை மதிக்க மாட்டார்.சட்டவிரோதமான கொலைகள் நிகழும்.,மனித உரிமைகள் நசுக்கப்படும், என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது...!!!
தன் பங்குக்கு டுதெர்தே நேரிடையாகவே இதை உறுதிசெய்வது போல் பேசினார். ஆறு மாதங்களில் அத்தனை கொடியவர்களும் சுட்டுக் கொல்லப்படுவார்கள். அவர்கள் பிணங்கள் சமுத்திரத்தில் விட்டுக் கடாசப்படும் என்றெல்லாம் பேசினார்...!!!
பரபரப்பாக நிகழ்ந்த தேர்தலின் முடிவில் எதிர் வேட்பாளரான அன்றைய ஜனாதிபதியை விட இரண்டு மடங்கு ஓட்டு பெற்று வெற்றி பெற்றார்
டுடெர்தே...!!!
ஜூலை 1 பதவி ஏற்றார்.முதல் தகவல் 110 போதை மருந்து விற்பனையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான போதை மருந்து விற்பனையாளர்களும், ரவுடிகளும், முன்னாள் குற்றவாளிகளும் போலீசில் சரணடந்தனர்...!!!
இன்னமும் களையெடுப்பு முடியவில்லை.கவலைப்படாமல் சுடுங்கள்.நாட்டை சுத்தம் செய்யுங்கள்.
உங்கள் செயலின் விளைவுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன். என்று காவல் படைக்கும், ராணுவத்திற்கும் உறுதி அளித்திருக்கிறார்...!!!
இதையே நம் இந்தியாவில் நடைமுறைபடுத்தி இருந்தால் ....? 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo