Onetamil News Logo

தூத்துக்குடியில் கூலி தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த பிரபல ரௌடி கைது ;போலீஸ் அதிரடி

Onetamil News
 

தூத்துக்குடியில் கூலி தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த பிரபல ரௌடி கைது ;போலீஸ் அதிரடி 


தூத்துக்குடி 2020 ஜனவரி 23 ;தூத்துக்குடியில் (23.01.2020) கூலி தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த பிரபல ரௌடி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணா புரத்தை  சேர்ந்த ஜெயராம் பாண்டியன் மகன்  மோகன் என்ற மோகன்ராஜ் பிரபல ரௌடியான  இவர்  மீது கொலை  மற்றும் கொள்ளை தொடர்பான 33  குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில்  உள்ளன , 
இவர் இன்று 23.01.2020 தூத்துக்குடி 1ம்கேட் காந்தி சிலை அருகே கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார், 
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து   காவல்துறையினர் ரௌடி மோகன் @மோகன்ராஜை பிடிக்க சென்ற போது   இரண்டு சக்கர வாகனத்தில் தப்பி சென்ற ரௌடி, தவறி கீழே விழுந்து காயம்பட்ட நிலையில் காவல்துறையினர் கருணை உள்ளத்துடன்  மீட்டு உடனடியாக  மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்து  தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo