Onetamil News Logo

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் மருத்துவமனையை கட்டுவதன் மூலம் மேற்கத்திய நாடுகளுடன் போருக்கு தயாராகி வரலாம் என நிபுணர்கள் அச்சம்

Onetamil News
 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் மருத்துவமனையை கட்டுவதன் மூலம் மேற்கத்திய நாடுகளுடன் போருக்கு தயாராகி வரலாம் என நிபுணர்கள் அச்சம்


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் மருத்துவமனையை கட்டுவதன் மூலம் மேற்கத்திய நாடுகளுடன் போருக்கு தயாராகி வரலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிழக்கு உக்ரைன் பகுதியில் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், உக்ரைனிய படைகளின் எதிர்ப்பு தாக்குதலால் ரஷ்ய படைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்யாவில் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையை அறிவித்தார். மேலும் நேட்டோ-வை எதிர்வினையாற்றுவதற்கு உக்ரைனில் உள்ள ககோவ்கா அணையை தகர்க்க ரஷ்ய ஜனாதிபதி புடின் திட்டமிட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்தன. ரஷ்ய ஜனாதிபதி புடினின் இந்த நடவடிக்கை நாட்டின் தென் பகுதி முழுவதும் பேரழிவு தரும் வெள்ளத்தைத் தூண்டும் என எச்சரித்து இருந்தனர்.
இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் நிலத்திற்கு அடியில்  பிரம்மாண்டமான மருத்துவமனை ஒன்றை கட்டி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நிலத்திற்க்கு அடியில் மருத்துவமனைகளை கட்டுவதன் மூலமும், நாட்டின் ராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்புகளை அதிகரிப்பதன் மூலமும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளுடன் போருக்குத் தயாராகிறார் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo