Onetamil News Logo

விசாரணை கமிஷன் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு 

Onetamil News
 

விசாரணை கமிஷன் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு   


சென்னை 2020 ஆகஸ்ட் 1: சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று உயிரிழந்தார். 
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர் எழுத்தாளர் சா.கந்தசாமி(80) இவர் 1968ம் ஆண்டு ‘சாயாவனம்’ என்ற புதினத்தின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1998ம் ஆண்டு ‘விசாரணை கமிஷன்’ என்ற நாவலுக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. எழுத்து மட்டும் இல்லாமல் குறும்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவற்றை இயக்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். "எழுத்துக்கலை கலை அலங்காரமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். சிறந்த இலக்கியம், நேரம், கலாச்சாரம், மொழி மற்றும் அரசியல் சித்தாந்தத்தின் தடைகள் ஆகியவற்றை கடந்து செல்லும் ஒன்றாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினத்துடன் தொடர்புடையது அல்ல. மிக முக்கியமாக, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு வாசகர் ஒரு நாவலை அல்லது சிறுகதையை புரிந்துகொள்ள முடியும். தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. இவரது தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் (terracotta) பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு 1989ம் ஆண்டு சென்னை தூர்தர்ஷன் காவல் தெய்வங்கள் என்னும் 20 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது.
 உடல்நலக்கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.  மு.க.ஸ்டாலின் இரங்கல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘‘சாயாவனம் என்ற புதினத்தின் வாயிலாக தமிழ் இலக்கிய உலகில் சாகாவரம் பெற்ற படைப்பாளி-சாகித்ய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமி உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைகிறேன்.
எழுத்து என்பது வெற்று அலங்காரத்திற்கானதல்ல என்பதையும், அது காலம், கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றில் ஏற்படுத்தப்படும் தடைகளை உடைத்தெறியும் படைப்பாயுதமாக இருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படையாக அறிவித்து, அதன்படியே படைப்புகளை வழங்கியவர் சா.கந்தசாமி. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கிய அன்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
 தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo