மாதம் ரூபாய் 15 ஆயிரம் சம்பளம், பிணவறை உதவியாளர் பணிக்கு 700 இன்ஜினியர்கள் 500 முதுகலை 2700 இளநிலை பட்டதாரிகள் கடும் போட்டி, நாட்டில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை விரக்தியில் இளைஞர் பட்டாளம்
கொல்கத்தா 2021 ஆகஸ்ட் 20: மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள நீரதன் சீர்காழி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவரை ஆய்வகத்தில் 6 பணியிடங்கள் காலியாக இருக்கின்றது இதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு மாதச் சம்பளம் ரூபாய் 15,000 இந்த வேலைக்கு 700 இன்ஜினியர்கள் 500 முதுகலை 2700 இளநிலை பட்டதாரிகள் உள்பட 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள் இதில் தேர்வான எண்பத்தி நான்கு பெண்கள் உள்ளிட்ட 784 பேருக்கு அடுத்த மாதம் ஒன்றாம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற இருக்கின்றது விளக்கமாக தொழிலில் இருப்பவர்கள் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்கும் வேலைக்கு முதல் முறையாக இன்ஜினியர்கள் பட்டதாரிகள் விண்ணப்பித்து இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாததற்கான ஒரு உதாரணம் இந்த சம்பவம் இவை.
நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாததால் படித்த பட்டதாரிகள் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் இந்திய நாட்டில் பல கோடிக்கணக்கான இளைஞர்கள் படித்ததற்கு வேலை இல்லை என்கின்ற நிலைமை உருவாகி இருப்பதனால் இளைஞர்கள் திக்குமுக்காடி தள்ளாடி நிற்கிறார்கள். மதுபோதையில்,இவர்களை நெறிப்படுத்த வேண்டும் என்று சொன்னால் இவர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வழங்க வேண்டும். இந்திய அரசு தகுதியான வேலைகளை படித்தவர்களுக்கு வழங்கினால் மட்டுமே அவர்களது வாழ்வு சிறக்கும் இல்லை என்று சொன்னால் போதை பழக்க வழக்கங்கள் பெருகும் குற்றங்கள் பெருகும் என்பது உண்மையாகும். இதனால் இளைஞர்கள் தறிகெட்டு சீர்கெட்ட பாதையில் சென்று வாழ்க்கையே அவர்களுக்கு சூனியமாக மாறிவிடும் என்பது உண்மையாகும்.