Onetamil News Logo

தூத்துக்குடி மாநகருக்குள் ஜோராக நடைபெறும் மணல் திருட்டு,டிராக்டர் மணல் ₹500  ரூபாய் என்றும்,டிப்பர் மணல் ₹2500 ரூபாய் வரையில் விற்பனை,மாநகராட்சி ஆணையாளர் மாற்றப்படுவாரா? 

Onetamil News
 

தூத்துக்குடி மாநகருக்குள் ஜோராக நடைபெறும் மணல் திருட்டு,டிராக்டர் மணல் ₹500  ரூபாய் என்றும்,டிப்பர் மணல் ₹2500 ரூபாய் வரையில் விற்பனை,மாநகராட்சி ஆணையாளர் மாற்றப்படுவாரா? 


 தூத்துக்குடி 2021 செப் 13 ; தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகருக்குள் நடந்து வரும் பணிகளில் ஒன்றாவது மழை நீர் வடிகால் அமைக்கும் பணி,இப்பணி மாநகருக்குள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இதனால் இப்பணி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. 
இந்த பணி எட்டையபுரம் சாலையை தொட்டு ஸ்டேட்பேங் காலணி, சுந்தரவேல்புரம்,மாணிக்கபுரம் தொடங்கி  கடற்கரையை நோக்கி  மேட்டுப்பட்டி வரையில்  நடந்து வருகிறது. இப்பணிக்காக தோண்டப்படும் குழியால் கிடைக்க பெறும் மணலை, தொடக்கத்தில் மாநகராட்சி சாலை பராமரிப்புக்காக பயன்படுத்தி வந்தது. இது காலபோக்கில்  அனைத்து மணல்களும் தெரிந்தும் தெரியாமலும் விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தி வந்தனர். டிராக்டர் மணல் ₹500  ரூபாய் என்றும் , டிப்பர் மணல் ₹2500 ரூபாய் வரையில் விற்கப்படுவதாக  தொடர்ந்து பொதுமக்கள் தரப்பில் இருந்து மாநகராட்சி க்கு புகார்   எழுந்தது. ஆனாலும் பொதுமக்கள் எழுப்பிய குற்றச்சாட்டின் மீது   மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக நடவடிக்கை எடுக்காததால் மணல் திருட்டு இப்பகுதியில் தடையின்றி  ஜோராக  நடந்தேறியது. 
இதில் மாணிக்கபுரம் பொதுமக்கள் சார்பாக ஆணையாளருக்கு ஓர் வேண்டுகோள் புகாராக கொடுக்கப்பட்டது. அதில் மழை வடிகால் அமைக்கும் பணியில் கிடைக்க பெறும் மணலை பொன்சுப்பையா தும்பு கிட்டங்கி அமைந்துள்ள சாலை முதல் ரோசம்மாள் ஆசிரியர் பயிற்சி பள்ளி வரையில் உள்ள சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால்,  இந்த மணல்களை இச்சாலையில் நிரப்பி புதிய தார் சாலை அமைத்து தரும்படி கேட்டுக் கொண்டனர். 
ஆணையாளர் அவர்களும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இச்சாலையை மேம்படுத்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணியில் கிடைக்க பெறும் மணலை இச்சாலையில்  கொட்டி சமபடுத்திக் கொள்ள பரிந்துரை செய்தார். இதற்கிடையில் இச்சாலையில்  சேமிக்கப்பட்ட மணல், சாலையில் சமப்படுத்தவில்லை என்பதால் இப்பகுதியில் கொட்டப்பட்ட மணல் இச்சாலையில்   கேட்பாரற்று கிடப்பில் கிடந்தது. 
இதை இன்று ஓர் மர்ம கும்பல் மாநகராட்சி அனுமதியோடு வந்திருப்பதாக பொய்யான தகவலை முன் நிறுத்தி, இச்சாலையில்  சேமிக்கப்பட்டுள்ள மணலை திருட்டுத் தனமாக அள்ள தொடங்கினார்கள். பொதுமக்கள் மறித்து கேட்ட போது சென்ட் மேரிஸ் காலணி  பகுதிக்கு ஒரு அவசர தேவைக்காக மண்டல துணை ஆணையாளர் பிரின்ஸ் அவர்கள் எடுத்துக் கொள்ள சொல்லி இருக்கிறார் என முதல்கட்டமாக தகவல் சொல்லிவிட்டனர். பொதுமக்களும் அவசர தேவை என்பதால் விட்டுவிட்டனர். ஆனால் ஒரு வண்டி என்று கூறிக் கொண்ட JCP மற்றும் டிப்பர் டிரைவர்கள்  கண் இமைக்கும்  நேரத்தில் ஐந்து வண்டி மணலை வேக வேகமாக அள்ளி சென்றனர். இவர்கள் நடவடிக்கை  மீது சந்தேகம் கொண்ட பொதுமக்கள் வாகனங்களை முற்றுகையிட்டு மறித்தனர். இதில் ஏற்பட்ட வாய்தகராறில் டிரைவர்களின் பதில் முன்னுக்கு முறனாக இருந்ததால் மணலை அல்ல கூடாது என்றும் , அப்படியே நீங்க அல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு ஆணையிட்ட துணை ஆணையாளர் பிரின்ஸ் அவர்களை வரச்சொல்லுங்கள் என்று  திடமாக கூறிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு நடந்ததை கேள்விபட்டு  பொதுமக்கள் அடுத்தடுத்து கூட தொடங்கினர். இதனை கண்ட JCP டிரைவர் வண்டியை வெளியே எடுப்பதை போல பாவலா கட்டிவிட்டு  ஓடிவிட்டார். இதனால் டிப்பர் லாரி டிரைவர் ஏற்றி வைத்த மணலை எடுத்த இடத்தில் கொட்டிவிட்டு , பொதுமக்களிடையே மன்னிப்பு கேட்டுக் கொண்டு வெளியேறினார். இனி இந்த பகுதியில் மணல் அல்ல வரக்கூடாது என டிரைவரை பொதுமக்கள்  எச்சரித்தும்  அனுப்பி வைத்தனர். பட்டபகலில் நடக்கும் இந்து துணிகர திருட்டு மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியாமலா நடக்கும் என பொதுமக்கள் சந்தேகம் கொள்கின்றனர். 
மேலும் பொதுமக்கள் கூறுகையில், பல சாலைகள் வழி தடமின்றி சிதைந்து கிடக்கிறது. அப்படிபட்ட சாலைகளை கணக்கில் கொண்டு,இப்பகுதிகளுக்கு இந்த மணல்களை கொடுத்து சீர் படுத்திக் கொள்ள மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் முன்வருமாறு கேட்டுக் கொண்டனர். இவைகளை    வருகின்ற மழை காலங்களுக்கு முன் முறையாக செய்ய முன் வந்தால் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கப்படும் என்றனர். அதைப்போல திருட்டுத் தனமாக நடந்து வரும் மணல் திருட்டையும் உரிய உண்மையான , நேர்மையான அதிகாரிகளை கொண்டு  தடுத்து நிறுத்திட இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo