Onetamil News Logo

தளிர் அறக்கட்டளை மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் தூத்துக்குடி பிரஸ் கிளப்க்கு சானிடைசர் வழங்கப்பட்டது. 

Onetamil News
 

தளிர் அறக்கட்டளை மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் தூத்துக்குடி பிரஸ் கிளப்க்கு சானிடைசர் வழங்கப்பட்டது. 


தூத்துக்குடி 2020 மார்ச் 31 ; தளிர் அறக்கட்டளை மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் தூத்துக்குடி பிரஸ் கிளப்க்கு சானிடைசர் வழங்கப்பட்டது. 
தளிர் அறக்கட்டளை  மற்றும் அற்புதம் மருத்துவமனை ஆகியவை இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் சானிட் டைசர்  மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை  வழங்கி  உள்ளது. இன்று மாவட்ட ஆட்சி  த்தலைவரிடம்  சானிடைசர் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை தளிர் அறக்கட்டளை தலைவர் ஆ. தனபால், தலைமை அதிகாரி ஜெயப் பிரகாஷ், அற்புதம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஜேம்ஸ் ஆகியோர் வழங்கியு ள்ளார்கள் அதனை தொடர்ந்து  தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார்கள். 
தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு முகக்கவசம், சோப், சானிடைசர் ஆகியவற்றை தூத்துக்குடி தளிர் அறக்கட்டளை ஆ. தனபால், தலைமை அதிகாரி ஜெயபிரகாஷ், அற்புதம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஜேம்ஸ் ஆகியோர்  தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் த. சண்முக சுந்தரம் அவர்களிடம் வழங்கினார்கள். உடன் செயற்குழு உறுப்பினர்கள்  காதர்,எம். ஆத்திமுத்து, மன்ற உறுப்பினர்கள் மாலை முரசு மோகன் ராஜ், கேப்டன் முத்து ராமன், எம். கண்ணன் உட்பட  உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர். சமூக அக்கறையோடு செயல்படும் மேற்கண்ட நிறுவனங்களுக்கு தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo