Onetamil News Logo

 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 12 நபர்களுக்கு தொழில்கடனாக 10 லட்சத்தை மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்க தலைவர் சரவணக்குமார் வழங்கினார். 

Onetamil News
 

 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 12 நபர்களுக்கு தொழில்கடனாக 10 லட்சத்தை மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்க தலைவர் சரவணக்குமார் வழங்கினார். 


 தூத்துக்குடி தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்த காலத்தில் 1989ல் தர்மபுரியில் மகளிர் சுயஉதவி குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. சிறிய அளவில் தொடங்கப்பட்ட குழு தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றத்தின் போது முறையாக செயல்படாமல் இருந்த குழுக்கள் மீண்டும் 2006ல் திமுக ஆட்சி அமைந்த பின் புத்துயிர் பெற்றது.
     அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்து முக.ஸ்டாலின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயனம் செய்து மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு பல்வேறு தொழில்கடன்களை நேரடியாக வழங்கியது மட்டுமின்றி சிறப்பாக பணியாற்றும் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கினார். கடந்த 10 ஆண்டுகளாக பெயரளவில் இயங்கிய இந்த குழுக்கள் 2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கடந்த காலங்களில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியப்படி தள்ளுபடி செய்யப்பட்டது. மாநில அளவில் குழுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தனர். அதனை கருத்தில் கொண்டு 2023 24ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி கடனுதவி வழங்குவதற்கு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நகர்புறம் கிராமப்புறங்களில் உள்ள குழுக்களுக்கு தொழில்கடன் வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கி வருகின்றன அதற்கென ஓரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதில் சுமார் 1500 பேர் உள்ளனர்.
    வெற்றிநகர் பகுதியில் உள்ள கணபதி மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 12 நபர்களுக்கு தொழில்கடனாக 10 லட்சத்தை மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்க தலைவர் சரவணக்குமார் வழங்கினார். சங்க செயலாளர் பாலமுருகன் உடனிருந்தார்.
இதுகுறித்து மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த ஓரு பெண்மணி கூறுகையில் இந்த மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் எங்களை போன்ற குழுக்களுக்கு பல்வேறு வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்குகின்றன. தொழில்கடன் என்று சிறிய தொகையாக பெற்றுவந்த நாங்கள் முறையாக திரும்ப செலுத்தி வருகிறோம். திமுக ஆட்சி அமைந்தபின்பு முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர்களுக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அடுப்புதும் பெண்களுக்கு வெளி உலகத்திற்கு செல்லும் வீதமாக எல்லா வகையிலும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். இந்த வங்கியின் தலைவர் சரவணக்குமார் ஊராட்;சி மன்ற தலைவராக இருந்து பணியாற்றுவது மட்டுமின்றி இந்தபகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மேலும் உருவாகுவதற்கும் உற்சாகமாக தொழில் செய்வதற்கும் பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறார். இந்த அரசுக்கு என்றும் நாங்கள் நன்றிகடன் பட்டவர்களாக இருப்போம் என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo