கபாடி போட்டி வெற்றி பெற்ற அணிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி கணேசபுரத்தில் பாலஅருண் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபாடி போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டியில் முதல்பரிசை சிந்தலக்கட்டை அணியும், இரண்டாம் பரிசை எஸ்ஏவி பள்ளி அணியும் தட்டி சென்றனர். பெண்களுக்கான போட்டியில் முதல்பரிசை செயின்ட் மேரிஸ் அணியும் இரண்டாவது பரிசை நாமக்கல் அணியும் தட்டிச்சென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவரும் திமுக கிழக்கு ஓன்றிய செயலாளரும், கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் வழங்கினார்.
விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்;ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தங்கமாரிமுத்து, திமுக ஓன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், இளைஞர் அணி ராஜேந்திரன், தொழிலதிபர் சங்கர்ராஜ், வழக்கறிஞர்கள் ராஜேஷ்குமார், பழனி, அர்ஜீன், மால்பாண்டியன், கருப்பசாமி, கணேசபுரம் ஊர்தலைவர் இளங்கோ, மற்றும் நித்தியானந்தம், சந்தனராஜ், சந்தனசேகர், பேச்சிமுத்து, பூபதிராஜா, ஜெயகணேஷ், சண்முகராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, போட்டிக்கான ஏற்பாடுகளை அருண்பிரதர்ஸ் கபாடி குழு மற்றும் இளைஞர் அணி எஸ்கேசி கபாடி குழுவினர் செய்திருந்தனர்.