Onetamil News Logo

சர்கார் படத்தில் மியூட் செய்யப்பட்ட வசனங்கள் ; படத்தை விளம்பரப்படுத்திய அதிமுகவினர் 

Onetamil News
 

சர்கார் படத்தில் மியூட் செய்யப்பட்ட வசனங்கள் ; படத்தை விளம்பரப்படுத்திய அதிமுகவினர்  


சென்னை  2018 நவம்பர் 10; தீபாவளி அன்று வெளியான சர்கார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அரசியலில் பல சர்ச்சையை ஏற்படுத்தியதால் சர்கார் படத்தில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது .சர்கார் படத்தை  அதிமுகவினர்  விளம்பரப்படுத்தி உள்ளனர். 
இந்த நிலையில் \ படத்தில் அதுமுக -வை விமர்சித்து பல நேரடி வசனங்கள் இருப்பதாகவும், மக்களுக்கு வழங்கிய இலவசங்கள் எரிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் சர்கார் படத்தில் இருந்து பல காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டது.
சர்கார்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இலவச பொருள்களான  மிக்ஸி, கிரைண்டர் போன்றவை நெருப்பில் தூக்கி எரியப்படும் காட்சி கட் செய்யப்பட்டுள்ளது , கோமளவல்லி என்ற உச்சரிப்பு வரும் போது கோமளா என்பதும்  மியூட் செய்யப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை மற்றும் 56 வருஷம் ஆகிய வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது.ஆக மொத்தம் 5 வினாடி காட்சி மட்டுமே படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த 5 வினாடி காட்சி நீக்கத்திற்காகத்தான் அதிமுகவினர் இத்தனை போராட்டத்தை மேற்கொண்டு விளம்பரப்படுத்தி உள்ளனர்.ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாக்கப்பட்டு தீபாவளி அன்று வெளியான சர்கார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அரசியலில் பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo