Onetamil News Logo

தமிழக அரசுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அரசு - சொத்து  குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடி 

Onetamil News
 

தமிழக அரசுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அரசு - சொத்து  குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடி 


பெங்களூரு  பிப் 18  ;
தமிழக அரசுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அரசு - சொத்து  குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடி அவற்றை  வழங்க கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளரவசி சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு முதலில் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை ஒருதலைபட்சமாக நடப்பதாக கூறி சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியது. பெங்களூருவில் இதற்காக தனி கோர்ட்டு அமைக்கப்பட்டது. 2004-05-ம் ஆண்டு முதல் 2015-16-ம் ஆண்டு வரை நடந்த விசாரணைக்கான செலவுகளை கர்நாடக அரசு செய்துள்ளது. இதற்கு மொத்தம் ரூ.12.04 கோடி செலவு ஆகியுள்ளது. இதற்கான செலவை பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டு மற்றும் போலீஸ் துறை செய்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா கூறியதாவது:- “ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.3.78 கோடி, சிட்டி சிவில் கோர்ட்டுக்கு ரூ.2.86 கோடி, கர்நாடக ஐகோர்ட்டுக்கு ரூ.4.68 கோடி, போலீஸ் பாதுகாப்புக்கு ரூ.70.33 லட்சம் செலவாகியுள்ளன. இத்துடன் வக்கீல்களுக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக கர்நாடக அரசுக்கு மொத்தம் ரூ.12.04 கோடி செலவாகி உள்ளது. இந்த செலவு தொகையை வழங்க கோரி தமிழக அரசுக்கு கர்நாடக அரசு சார்பில் கடிதம் எழுதியுள்ளோம்“. இவ்வாறு மந்திரி ஜெயச்சந்திரா கூறினார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo