Onetamil News Logo

அமமுக வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Onetamil News
 

அமமுக வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.


சாத்தான்குளம் 2019 டிச 03 ; தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அறிவிக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் அச்சம்பாடு சௌந்தரபாண்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர் பொன்முருகேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேசுகையில் தமிழகத்தில் முதற்கட்டமாக வரப்போகும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு செய்துள்ள உங்களில் ஒருவர்தான் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக மாவட்ட கவுன்சிலராக போட்டியிட போகிறிர்கள். அவர்களின் வெற்றிக்கு மற்றவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் கழகத்தினர் கண்துஞ்சாது உழைத்து 100 சதவிகித வெற்றியை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  ஆகியோர் கரங்களில் ஒப்படைக்க வேண்டும் அதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என பேசினார். நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட அமமுக வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ்.ராஜ்மோகன் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் செம்பூர் ராஜ்நாராயணன், சாத்தான்குளம் நகர செயலாளர் செல்லத்துரை மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் சந்தர்ராஜ் ஒன்றிய துணை செயலாளர் சின்னதுரை ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற  தலைவர் சின்னதுரை முன்னாள் யூனியன் சேர்மங்கள் சுரேஷ்குமார் ஆழ்வை விஜயகுமார் ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவபாண்டியன் நகர அவைத்தலைவர் சோமசுந்தரம் கூட்டுறவு வங்கி தலைவர் திருமனவேல் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் ஊராட்சி செயலாளர்கள் ஆனந்தகுமார் பாலமேனன் கார்தீஸ்வரன் முன்னாள் கவுன்சிலர்கள் ரமேஷ், காமராஜ் மகளிரணி ஜெயராணி விண்ணரசி பிள்ளைவிளை கிளை செயலாளர் பால்துரை மற்றும்  பாலஜெயம் சாம்ராஜ் உட்பட முன்னாள் யூனியன் கவுன்சிலர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo