Onetamil News Logo

சாத்தான்குளம் அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது ;பரபரப்பு 

Onetamil News
 

சாத்தான்குளம் அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது ;பரபரப்பு 


                      
தூத்துக்குடி 2020 ஜூலை 16 ;சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடலிவிளை காட்டுப்பகுதியில் 8 வயது முத்தாரு என்ற  சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று 15ம் தேதி சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான வடலிவிளை - சடையங்கிணறு ரோட்டில் உள்ள இசக்கியம்மன் கோவில் அருகில் உள்ள பாலத்திற்கடியில் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்த சேகர் மகள் முத்தாரு என்ற 8 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததுள்ளார்.
இத்தகவலறிந்த சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இறந்த சிறுமியின் வீட்டில் மின் இணைப்பு இல்லாத காரணத்தால் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வல்லவன் மகன் முத்தீஸ்வரன்(18) என்பவரது வீட்டிற்கு நேற்று 15ம் தேதி அன்று சிறுமி டி.வி பார்க்க சென்றுள்ளார். அப்போது முத்தீஸ்வரன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முத்தீஸ்வரனின் நண்பரான நந்தீஸ்வரன்(18), ஆகியோர் சிறுமியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். பின் அவர்கள் இருவரும் சேர்ந்து இரு சக்கர வாகனத்தின் மூலம் சிறுமியின் உடலை பிளாஸ்டிக் டிரம்மில் வைத்து சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடலிவிளை சடையங்கிணறு ரோட்டில் உள்ள இசக்கியம்மன் கோவில் அருகில் உள்ள பாலத்திற்கு அருகில் வீசிச் சென்றது தெரியவந்தது.  
பின் சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்தீஸ்வரன் மற்றும் நந்தீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo