Onetamil News Logo

சாத்தான்குளம் அருகே சுமை ஆட்டோ பனை மரத்தில்  மோதியதில் டிரைவர் பலி

Onetamil News
 

சாத்தான்குளம் அருகே சுமை ஆட்டோ பனை மரத்தில்  மோதியதில் டிரைவர் பலி


சாத்தான்குளம்,2018 ஆகஸ்ட்  9:சாத்தான்குளம் அருகே சுமை ஆட்டோ பனை மரத்தில் மோதியதில் அதன் டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலச்சேரியைச் சேர்ந்தவர் வேல் மகன் பேச்சிமுத்து ( 35). இவர் சொந்தமாக சுமை ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் நாசரேத்தில் இருந்து கோழி தீவனத்தை ஏற்றி கொண்டு சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் சென்றார். சாத்தான்குளம் அடுத்த அரசு போக்குவரத்து கழக பணிமனை செல்லும் வழியில் உள்ள தரைமட்ட பாலம் அருகே அதிகாலை 1மணி அளவில் வந்தபோது சுமை ஆட்டோ எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் நின்ற பனை மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் சுமை ஆட்டோவின் முன்பக்க சேதமாகி டிரைவர் பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். 
                                                                                                                                                  தகவலறிந்து சாத்தான்குளம்  போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த பேச்சிமுத்துக்கு மனைவி மற்றும் 3குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo