Onetamil News Logo

ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் குடும்பத்தினருக்கு நடிகர் சரத்குமார் நேரடியாக சென்று ரூ.5 இலட்சம் நிதியுதவியாக இன்று வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் 

Onetamil News
 

ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் குடும்பத்தினருக்கு நடிகர் சரத்குமார் நேரடியாக சென்று ரூ.5 இலட்சம் நிதியுதவியாக இன்று வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் 


சாத்தான்குளம் 2020 ஜூலை 4 ; தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த ஜெயராஜ்,    பென்னிக்ஸ் ஆகியோர் குடும்பத்தினருக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் திரு.சரத்குமார் அவர்கள் அண்ணாரது மனைவி மற்றும் தாயார் திருமதி.செல்வராணி மற்றும் மூத்த மகள் திருமதி. பெர்சி ஆகியோர்களிடம்  ரூ.5 இலட்சம் நிதியுதவியாக வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் சம்பவத்தில் மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் குடும்பத்தினருக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரடியாக சென்று அண்ணாரது மனைவி மற்றும் தாயார் செல்வராணி மற்றும் மூத்த மகள் பெர்சி ஆகியோர்களிடம் ரூ.5 இலட்சம் நிதியுதவியாக இன்று (04.07.2020) வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்;. 
பின்னர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர்களின் மரணம் மிகப்பெரிய வேதனையை தந்துள்ளது. இந்த வேதனையை பகிர்ந்துகொள்ள நோடியாக அவர்களது வீட்டுக்கு வந்துள்ளேன். நீதிமன்றம், சிபிசிஐடி போலீசார் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவது அவசியம். இனி இப்படி ஒரு சம்பவம் நடைபெற கூடாது. அவர்களது குடும்பத்தினர்களுக்கு ஒரு சகோதரனாக துணை நிற்பேன் என தெரிவித்தார். 
முன்னதாக சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோரது செல்போன் கடையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அண்ணாரது திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். 
 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo