Onetamil News Logo

கல்விளை  ஏழைச்  சிறுமி வன்புணர்ச்சி கொலையில்  நடந்தது என்ன?

Onetamil News
 

கல்விளை  ஏழைச்  சிறுமி வன்புணர்ச்சி கொலையில்  நடந்தது என்ன?


தூத்துக்குடி 2020 ஜூலை 16 ;தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்திற்கு உட்பட்ட உடன்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கல்விளை கிராமத்தில் வசிப்பவர்கள் ஏழை மக்களான முனீஸ்வரி - சேகர் என்ற தம்பதியினருக்கு ,9 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகளும் இருந்தனர். சேகர் வெளியூர்களுக்கு கூலி வேலைக்கு சென்று விடுவார் வீட்டிற்க்கு சரிவர  வருவது கிடையாது. அவரது மனைவி  முனீஸ்வரி மட்டுமே தினசரி கூலிவேலை செய்து இரு குழந்தைகளையும் படிக்க வைத்துக்கொண்டு வளர்த்து வந்து உள்ளார். முனீஸ்வரிக்கு நல்ல குடியிருக்க வீடு கிடையாது அதில் மின்சார வசதியும் கிடையாதாம். அதனால் நான்கு கம்பியை நட்டு அதில் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்டு குடி இருந்து வந்துள்ளார்.வழக்கம் போல முனீஸ்வரி குழந்தைகளை விட்டுவிட்டு காலையில் வேலைக்கு சென்று விடவே அதே தெருவில் வசிக்கிற வல்லன் மகன் முத்தீஸ்வரன் என்பவனும்  சுயம்பு மகன்  நந்தீஸ்வரனும்  விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியை தங்கள்  வீட்டிற்கு டி.வி பார்க்கவா வா என்று ஏமாற்றி அழைத்து சென்று இருவரும் வன்புணர்ச்சி செய்துள்ளனர் அந்த காம கொடூரத்தில் சிறுமி இறந்துவிட கொலையை மறைக்கும் நோக்கில் ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் சிறுமி உடலை தூக்கி வைத்து  யாருக்கும் தெரியாமல் மோட்டார் சைக்கிளில் தூக்கிச் சென்று அருகில் உள்ள சடையனேரி கால்வாய் அருகில் உள்ள பலம் அருகே தூக்கி கொண்டு போட்டு உள்ளனர். 
பகல் நேரத்தில் பக்கத்து வீடு சிறுமிகள் விளையாடுவதற்காக சிறுமியை தேடி அலைந்து காணவில்லை என்று பேச இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட போனவர்கள் மேற்படி எதிரிகளின் தோற்றம் அழுக்கு போதை மவுனம் என்ற தோற்றத்தை வைத்து  சந்தேகப்பட்டு விசாரித்து உள்ளனர். மேற்படி சம்பவத்தை சம்பவ எல்லைக்கு உட்பட்ட மெய்ஞானபுரம்  போலிசாருக்கு தகவல்  சொல்ல உடல் கிடந்த இடம்  சாத்தான்குளம் காவல் நிலையம் என்பதால் ஊரார் சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் சொல்வலி சம்பவ இடத்திற்க்கு வந்த போலிசார் சிறுமி உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி உள்ளனர். மேற்படி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.ஐ விசாரணை நிகழ்வதாலும் இரவு 8.00 மணிக்கு பின்னரே இரு காம கொடூரர்களையும் விசாரித்து வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo