Onetamil News Logo

தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த 7 வயது சிறுமி கொலை – சாத்தான்குளம் போலீசார் விசாரணை

Onetamil News
 

தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த 7 வயது சிறுமி கொலை – சாத்தான்குளம் போலீசார் விசாரணை


தூத்துக்குடி 2020 ஜூலை 15 ;தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம்  அருகில் உள்ள கல்விளை பகுதியை சேர்ந்தவர் சேகர் இவரது 7 வயது மகள் இன்று காலை தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி தீடீரெண்டு மாயமானாள் சிறுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் சிறுமியை உறவினர்கள் தேடினர்.
இந்த நிலையில் அந்தப்பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் ஒதுக்குபுறமாக கிடந்த தண்ணீர் டிரம்பில் ஒரு சிறுமியின் சடலம்  கிடப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்து போலீஸார் சம்ப இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்பொழுது போலீஸ் விசாரணையில் காணாமல் போன சிறுமியின் உடல் தான் என்பது  தெரியவந்தது. காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மாஸ்ட்டம்  செய்வதற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருப்பதாக தெரியவந்துள்ளது 
இதுகுறித்து போலீஸ் விசாரணையில் நந்தீஸ்வரன்,மூத்தீஸ்வரன் ஆகியோரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவர்களுக்கு சொந்த ஊர்  தூத்துக்குடி மாணிக்கபுரம்,எனப்து தெரிய வந்துள்ளது.இவர்கள் தான் குற்றவாளிகளா?  இறந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமி கொலை செய்யப்பட்டாரா?  எதற்காக கொலை செய்யப்பட்டார்? இதுபோன்ற கேள்விகளுக்கு போலீஸார் விடைதேடி வருகிறார்கள். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo