Onetamil News Logo

திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவு. சாத்தான்குளம், பெரியதாழையில் மவுன அஞ்சலி ஊர்வலம்

Onetamil News
 

திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவு. சாத்தான்குளம், பெரியதாழையில் மவுன அஞ்சலி ஊர்வலம்



சாத்தான்குளம்,2018 ஆகஸ்ட்  9:
திமுக தலைவரும். முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி உடல்நலக்குறைவால் மறைவடைந்ததையொட்டி சாத்தான்குளம், பெரியதாழையில் சர்வகட்சி மற்றும் பொதுமக்கள் மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது. 
திமுத தலைவரும், முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி  நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சாத்தான்குளம், முதலூர், தட்டார்மடம், பேய்க்குளம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டன. சாத்தான்குளம் பேருராட்சி 1வது வார்டு ஆர்.சி வடக்கு  தெருவில்  வார்டு திமுக பொருளாளர் ஜெபஸ்தியான் தலைமையில்  கருணாநிதி உருவ படத்துக்கு மாலையணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. இதில் வார்டு தலைவர் ஆரோக்கியராஜ்,எஸ்.சி/எஸ்.டி பிரிவு முருகன்,ஒன்றிய பிரதிநிதி அம்புரோஸ்,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுபாண்டியன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் வக்கில் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சாத்தான்குளத்தில் ஒன்றிய, நகர திமுக  மற்றும் சர்வகட்சியினர் சார்பில் திமுக தலைவர் மு. கருணாநிதி மறைவு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது. ஊர்வலகத்துக்கு நகர திமுக செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். ஊர்வலமானது சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி மெயின் பஜார், பெருமாள்கோயில்தெரு, மாணிக்கவாசபுரம் தெரு, தச்சமொழி தெரு, பழைய வேதக்கோயில் தெரு, ஆர்.சி வடக்குத்தெரு, புதிய பஸ் நிலையம், மேலசாத்தான்குளம், இட்டமொழி சாலை வழியாக மீண்டும் பழைய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னர் பழைய பஸ் நிலையத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார். நகர செயலாளர் இளங்கோ, ஒன்றிய துணை செயலாளர் பாலமுருகன், முன்னிலை வகித்தார். இதில் கருணாநிதி உருவபடத்துக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி கெங்கை ஆதித்தன், ஒன்றிய மதிமுக செயலாளர் பலவேசபாண்டியன், மாவட்ட மதிமுக பிரதிநிதி மகாராசன், தேமுதிக முன்னாள் ஒன்றிய பொருளாளர் பரமசிவம்,வாசகர் வட்டத் தலைவர் நடராஜன், பாரதி கலை இலக்கிய  பேரவை தலைவர் ஈஸ்வர்சுப்பையா, வட்டார மனித நேய நல்லிணக்க பெருமன்ற செயலாளர் பால்துரை, சாத்தான்குளம் நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் வேணுகோபால், வட்டார தமாகா தலைவர் முரசொலிமாறன், மார்க்கிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலசுந்தரகணபதி, பாலகிருஷ்ணன், சாத்தான்குளம் வர்த்தக சங்கத் தலைவர் துரைராஜ், முன்னாள் கேரள மாநில அதிமுக பொதுச் செயலாளர் பண்டாரபுரம் ராஜபாண்டியன், மனித நேய மககள் கட்சி ஒன்றிய செயலாளர் தௌபீக¢ உள்ளிட்டோர் பேசினர். இதில் திமுக கூட்டணி அனைத்து கட்சி  நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.மாவட்ட திமுக பிரதிநிதி நயினார் நன்றி கூறினார்.
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் பொதுமக்கள் மற்றும் திமுக சார்பில் மறைந்த கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது. இதில் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து கருப்பு கொடி பிடித்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதில் ஊர்நல கமிட்டியினர், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள்,  முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர்  கலந்து  கொண்டனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo