Onetamil News Logo

தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர்,சப்-இன்ஸ்பெக்டர் ,காவலர் ஆகியோர் சிறையிலடைப்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர்,சப்-இன்ஸ்பெக்டர்,காவலர் ஆகியோர் சிறையிலடைப்பு     


தூத்துக்குடி 2020 ஜூலை 2 ;சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் இன்று இரவு தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இன்று இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ,போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர் முருகன், ஆகிய 3 பேர் மட்டும்  சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகம் பின்புறமுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து இன்று காலை முதல் மாலை வரை உள்ள சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தலைமையில் விசாரணைக்குப் பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 3 பேருக்கும் மருத்தவ உடல் தகுதி செக்-அப் செய்யப்பட்டது. அதன் பின்னர் தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்த முதன்மை குற்றவியல் நீதிபதி ஹேமா முன்பு  ஆஜர்படுத்தப்பட்டனர்.
3 போலீசாரை ஆஜர்படுத்திட முன்னாள் டவுன் டி.எஸ்.பி பிரகாஷ், டி.எஸ்.பிக்கள். கணேஷ்,கலை கதிரவன், ஆகியோர் தலைமையில் மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர்  ஜெயபிரகாஷ், குற்றப்பிரிவு ஆய்வாளர் அம்பிகா,தென்பாகம் போலீஸ் ஸ்டேஷன் ஆய்வாளர் கிருஷ்ணன்,  நீதிமன்றம்,மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போன்ற இடங்களில்  500க்கும் மேற்பட்டபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo