Onetamil News Logo

நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்’ விழிப்புணர்வு பேரணி 

Onetamil News
 

நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்’ விழிப்புணர்வு பேரணி 


தூத்துக்குடி செப் 1 ;                                                                                         தூத்துக்குடியில் ‘நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்’ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் முன்பிருந்து துவங்கி  கடற்கரை வரை ஓரமாக எவருக்கும் தொந்தரவு இல்லாமல் பொது மக்களிடம் மாறுபட்டமுறையில்  நின்று பிரசாரம் செய்தனர். ‘நதிகளை காப்போம் பாரதம் காப்போம்’ என்கிற பாதாகைகளை ஏந்தியவாறு நின்ற அவர்கள், அந்த வழியாக செல்வோரிடம் அது குறித்த விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியதோடு விளக்கமும் கொடுத்தனர்.  காலை 8 மணி அளவில் தொடங்கிய இந்த பிரசார பணி 11 மணி வரை தொடர்ந்து  நடந்தது. 
                                                                                                                                                                                                     இந்திய  அளவில் கல்லூரி மாணவர்கள்,மாணவியர்கள் , இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள்,  பொதுமக்கள் அனைவரும் இணைந்து  ’நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்’ என்கிற விழிப்புணர்வு இயக்கம்  உருவாக்கி உள்ளனர். இன்று நாடு முழுவதிலும் ’நதிகளை காப்போம் பாரதம் மீட்போம்’ என்கிற விழிப்புணர்வு பிரசாரத்தை  டெல்லியில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தொடங்கிவைத்தார்.அதன் படி இன்று  இந்தியா  முழுவதிலும் சமூக ஆர்வலர்கள்  மற்றும் ஈஷா யோகா மைய தன்னார்வ தொண்டர்கள் போன்றோர்  ‘நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்’ என்கிற பாதாகைகளை ஏந்தியும் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
 கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  ஈஷா யோகா மையத்தினர் வரும் 3-ம் தேதி கன்னியாகுமாரி  முதல் இமயமலை  வரை  நதிகளை மிட்போம் பாரதம் காப்போம் இயக்கத்தினர்  விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.  விழிப்புணர்வு  பயணத்துக்கு ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு தலைமை ஏற்கிறார்.
இந்தப்  பயணமானது 3-ம் தேதி கோவையில் தொடங்கும் அவர்களது விழிப்புணர்வு பிரசாரம், 4-ம் தேதி கன்னியாகுமரி, 5-ம் தேதி திருவனந்தபுரம், மதுரை, 6-ம் தேதி திருச்சி, 7-ம் தேதி புதுச்சேரி, 8-ம் தேதி மைசூரு, 9-ம் தேதி பெங்களூரு, 10-ம் தேதி சென்னை, 13-ம் தேதி அமராவதி, 14-ம் தேதி ஹைதராபாத், 17-ம் தேதி மும்பை, 20-ம் தேதி அகமதாபாத், 23-ம் தேதி இந்தோர், 24-ம் தேதி போபால், 26-ம் தேதி லக்னோ, 28-ம் தேதி ஜெயப்பூர், அக்டோபர் 1-ம் தேதி ஹரித்வார் வழியாக 2-ம் தேதி டெல்லி சென்றடைகிறது.
குமரி முதல் இமயம் வரை கார் மற்றும் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டி செல்ல இருக்கிறார் சத்குரு. இது குறித்து அவர், ‘’நமது பாரத தேசம் 25 சதவீதம் பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதை இப்படியே விட்டால், வரும் 2030-ல் மக்கள் உயிர் வாழ தேவையான தண்ணீர் 50 சதவீதம் மட்டுமே இருக்கும். கடந்த 1947-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் இன்று தனிமனிதருக்கு 25 சதவீதம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.
எனவே நதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிற வகையில் நதிகள் மீட்கப்பட வேண்டும். அதற்கு ஒட்டு மொத்த மக்களின் ஆதரவும் தேவை. அதுபோல் அரசின் துரித நடவடிக்கையே இதெல்லாவற்றையும் சாத்தியமாக்கும். நாங்கள் வைக்கிற கோரிக்கையில், மீட்கப்படுகிற நதிகளின் இரு கரையிலும் 1 கி.மீ அகலத்திற்கு மரங்களை நட வேண்டும். அதுபோல் அரசு நிலங்களில் காடுகள் வளர்க்கப்பட வேண்டும்.
தனியார் நிலங்களில் பழ மரங்கள் வளர்க்கப்பட வேண்டும்.
நாங்க பண்ற இது போராட்டமல்ல. இது ஆர்ப்பாட்டமும் அல்ல. நம் நதிகள் வற்றி வருவதைப்பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மட்டுமே இது. ஒவ்வொரு மனிதரும் நம் நாட்டின் உயிர் நாடிகளான நதிகளை காக்க வேண்டும்.                                                                                                                                                                                                                                              நீங்களும் இந்த திட்டத்தை ஆதரியுங்கள். அதற்கு 80009 80009 என்கிற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo