Onetamil News Logo

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத் இன்று டிச 14ம் தேதி கைது 

Onetamil News
 

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத் இன்று டிச 14ம் தேதி கைது   


சென்னை 2020 டிசம்பர் 14 ; சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு முடிவை எப்படி எடுத்தார்? வேறு ஏதோ நடந்திருக்கிறது என்று ஒவ்வொருவரும் பேசிக் கொள்கிறார்கள். நடிகை சித்ரா கடந்த புதன்கிழமை நசரத்பேட்டையில் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை அல்ல. கொலை என சித்ராவின் பெற்றோரும், நண்பர்களும் சந்தேகித்தனர். ஆனால் பிரேத பரி சோதனை அறிக்கையில் அவரது மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சித்ராவுக்கும், தொழில் அதிபர் ஹேம்நாத்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பதிவு திருமணம் செய்துள்ளனர். இவை அனைத்தும் பெற்றோர் சம்மதத்துடனேயே நடந்துள்ளது.விரைவில் திருமண கோலம் காண இருந்த சித்ரா இப்படி ஒரு முடிவை திடீரென்று எடுத்திருக்கிறார் என்றால் நிச்சயம் மிகப்பெரிய மன அழுத்தத்துக்கும் அதில் இருந்து மீள முடியாத நிலைக்கும் சென்றிருக்கிறார் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
              இந்த நிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர். சித்ராவை அவரது கணவரான ஹேம்நாத் அடித்து கொலை செய்ததாக தொடர்ந்து கூறி வந்தனர்.இதற்கிடையே பிரேத பரிசோதனையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து தான் இறந்துள்ளார் என்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் தொடர்ந்து மாறுபட்ட தகவல்களை கூறி வருவதாக தெரிகிறது.
சித்ரா பயன்படுத்திய செல்போனை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஏதாவது முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்த்து காத்துள்ளனர்.சித்ராவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசாரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இதனால் இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் தொடங்கியுள்ளது.  இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo