Onetamil News Logo

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய குடோன்கள் சீல் வைப்பு: உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் நடவடிக்கை,உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்றும் எச்சரிக்கை

Onetamil News
 

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய குடோன்கள் சீல் வைப்பு: உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் நடவடிக்கை,உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்றும் எச்சரிக்கை


தூத்துக்குடி 2022 நவம்பர் 22 ;உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய குடோன்கள் சீல் வைப்பு: உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் நடவடிக்கை,உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்றும் எச்சரிக்கை.விடுக்கப்பட்டுள்ளது.
                    தூத்துக்குடி மாவட்டம்.,உணவு பாதுகாப்புத் துறை,நியமன அலுவலர்,மரு.ச.மாரியப்பன்,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேணா, மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ், ஆகியோரது வழிகாட்டுதலில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக, உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்று தொழில் புரிய வலியுறுத்தி, பொது அறிவிப்பு பிரசுரித்தல், பத்திரிக்கை செய்திக்குறிப்பு வெளியீடுதல், விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் உரிமம் வழங்கும் மேளா போன்றவற்றை  உணவு பாதுகாப்புத் துறையானது நடத்தி வந்தது. ஆனாலும், இன்னும் பல உணவுத் தொழில் சார்ந்த வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமமின்றி தொழில்புரிந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. எனவே, வணிகர்களின் இந்த சட்ட விதிமீறலை தடுக்கும் வண்ணம், திடீர் ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை துவங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக, உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் தலைமையில், சக்திமுருகன், காளிமுத்து ஆகிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் தூத்துக்குடியின் துறைமுகச் சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பொழுது, வின் வேர்ஹவுசிங் மற்றும் அழகர் குடோன்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல்  இயங்கி வந்தது கண்டறியப்பட்டு, உடனடியாக ஆணை வழங்கி, மூடி முத்திரையிடப்பட்டது. இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். எனவே, உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமத்தினை, https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்ற பின்னரே, உணவு வணிகம் புரிய வேண்டும் என்று அறிவிக்கப்படுகின்றது.
              இயற்கை நீதிக்குட்பட்டு அநேக விழிப்புணர்வுகளும், அறிவிப்புகளும் இதுவரை வழங்கப்பட்டுள்ளதால், இனிவரும் நாட்களில், எந்த உணவு வணிகராவது, உணவு பாதுகாப்பு உரிமமின்றி உணவுத் தொழில் புரிவது ஆய்வின் போது கண்டறியப்பட்டால், நிறுவனம் அல்லது கடையை மூடி முத்திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
             எனவே, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரியும் உணவு சம்பந்தப்பட்ட வணிகர்கள், சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமத்தினை பெற்றிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo