Onetamil News Logo

மருதூர் அணைக்குள்  200 மாடுகள் சிக்கின 100 மாடுகள் மீட்பு;மீதி மாடுகளை தேடும்பணி தீவிரம்

Onetamil News
 

மருதூர் அணைக்குள்  200 மாடுகள் சிக்கின 100 மாடுகள் மீட்பு;மீதி மாடுகளை தேடும்பணி தீவிரம்


செய்துங்கநல்லூர்,2018 ஜுலை.11:  மருதூர் அணைக்குள் 200 மாடுகள் சிக்கின. அதில் 100 மாடுகளை மீட்டனர். மீதி மாடுகளை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. 
   மருதூர் அணை தாமிரபரணி நதியின் 7 வது அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டு அமலை செடிகளால் நிறைந்து காணப்படுகிறது . நேற்று முன்தினம் கலியாவூர் அருகில் உள்ள உழக்குடியை சேர்ந்த வடிவேல் செல்லையா, அர்சுணன் சுப்பையா, சிதம்பரம், பண்டாரம், சுடலை சிவா என்பவர்களுக்கு  சொந்தமான 200க்கும் மேற்பட்ட மாடுகள் மேய்ச்சலுக்காக அணைக்கட்டுக்குள் சென்றது. இதற்கிடையில் பாசனத்துக்காக தாமிரபரணியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தண்ணீர் மருதூர் அணையை நிரப்பியது. தண்ணீரை தேக்கி வைத்து இரண்டுநாள் கழித்து மருதூர்  மேலக்கால் மற்றும் கீழக்காலில் பாசனத்துக்கு  தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.  இதற்குள் அணைக்குள்  மாடுகள் சிக்கி கொண்டன. பொதுமக்கள் மாட்டை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.  இது குறித்து தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மாடுகளை மீட்க சிப்காட் தீயணைப்பு படை வீரர்கள்  சந்திர சேகரன் தலைமையில்  வந்து சேர்ந்தனர்.
  அணைக்கட்டில்  தண்ணீர் இருக்கும் போது மீட்பு பணி தடை பட்டது. எனவே தாசில்தார் பொதுப்பணித்துறையினரிடம் பேசி தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுத்தார். பொதுப்பணித்துறை பாசன உதவியாளர் கல்யாணி மருதூர் கீழக்காலில் 250 கன அடிதண்ணீரை¬யும் , மருதூர் மேலக்காலில்  150 கனஅடி தண்ணீரையும் , ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு 500 கனஅடி தண்ணீரையும் திறந்து விட்டார். இதனால்  நேற்று முன்தினம் இரவு 7மணிக்கு தண்ணீர் குறைந்தது. ஆனாலும் அமலை செடிகள் அதிகமாக இருந்த காரணத்தினால் மீட்பு பணி தாமதப்பட்டது. ஊர் மக்கள் உதவியோடு தீயணைப்பு படையினர் சுமார் 70 மாடுகளை மீட்டனர். பின் இரவு நேரமான காரணத்தினால் மீட்பு பணி தள்ளி வைக்கப்பட்டது.
 மீண்டும் நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் தலைமையில் அதிகாரிகள் கலியாவூருக்கு வந்தனர்.  வல்லநாடு வருவாய் ஆய்வாளர்  மைக்கேல் , கிராம நிர்வா அதிகாரி மாரிசங்கர்,  கால்நடை மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் பிரேமா, ஜோசப் சந்திரன், துணை இயக்குனுர் ஜெயகிறிஷ்டி, பூவாணி டாக்டர் காசிராஜன் உள்பட மருத்துவகுழுவினரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
 ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படை நிலைய அதிகாரி முத்துகுமார் , விஜயகுமார், ரோலன், ராமமூர்த்தி கொண்ட குழுவினர் தாமிரபரணி ஆற்றுக்குள்  இறங்கி தேட ஆரம்பித்னர் இவர்களுடன் உள்ளூர் இளைஞர்களும் சேர்ந்து கொண்டனர்.
 காலை 11 மணிக்குள் 29 மாடுகள் உயிரோடு மீட்கப்பட்டு விட்டது. 1 காளைமாடு இறந்த நிலையில் மீட்கப்பட்டது. மற்ற மாடுகளை மீட்கும் பணி நடந்துவருகிறது.

 சப்கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டார் மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்

   மருதூர் அணையில் உள்பகுதியில் மணல் அள்ளி விட்டார்கள். இதனால் பல இடங்களில்  மிக அதிகமான பள்ளதாக்கு கொண்ட குழிகள் உள்ளன.  அதோடு மட்டுமல்லாமல் அமலை செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. இந்த செடிகளுக்குள் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு மிக கடினமாக உள்ளது. இந்த செடிகளுக்குள்தான் மாடுகள் சிக்கி கொண்டன. ஆங்காங்கே சில இடங்களில் தீவு போல  உள்ள இடங்களில் கூட மாடுகள்  தப்பி நிற்கலாம். எனவே வாலிபர்கள் உள்ளே நுழைந்து தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கண்டு கொள்ளாத பொதுப்பணித்துறையினர் ;
 மருதூர் அணைக்கட்டு முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுபாட்டுக்குள் தான் உள்ளது. மணல் அள்ளும்போது பொதுப்பணித்துறை அதிகாரி அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தனர். அதன் பின் அமலை செடியை அகற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் மாடு மாட்டிக்கொண்டிருந்தது என்ற தகவல் தெரிந்த பிறகும் கூட  நேற்று மதியம் 12 மணி வரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. பாசன உதவியாளர் கல்யாணி என்பவர்  மட்டும் அங்கு தண்ணீரை  திறந்து விட மக்களுக்கு உதவியாக இருந்தார்.
தாசில்தார் பேட்டி ;
மாடுகளை  மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்களுடன், உள்ளூர் வாலிபர்கள் முயற்சி வருகிறார்கள். ஆனாலும் அமலை செடி அதிகமாக உள்ள காரணத்தினால்  உள்ளே சிக்கிய மாடுகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாலைக்குள் மாடுகளை மீட்டு விடுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
எத்தனை மாடு ;
உழக்குடியை சேர்ந்த  ஐந்து பேருக்கு சொந்தமான 200 மாடுகள் மருதூர் அணையில் மேய்ந்த போது  வெள்ளத்தில் சிக்கி கொண்டது. தற்போது 100 மாடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீதி மாடுகள் மந்தைக்கு   சென்றால் மட்டுமே எத்தனை மாடுகள் மீட்கப்பட்டது. தற்போது எத்தனை மாடுகள் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட து  என கண்டுப்பிடிக்க முடியும். எனவே மந்தைக்கு வரும் மாடுகளை மாட்டுக்கு சொந்தமானவர்  எதிர்பார்த்து உள்ளனர்.
அமலை செடிகள் அகற்றம் ;                                                                             தேடும் பணி தடை பட்ட காரணத்தினால் ஜெ.சி.பி இயந்திரம் மூலமாக  அமலை செடி அகற்றும்பணி நடந்து வருகிறது. ஆனாலும் ஆற்றுக்குள் இறங்கி அமலை செடி அகற்றினால் மட்டுமே முழு அமலை செடியை அகற்ற முடியும் . எனவே  பொக்கிலின் இயந்திரம் கொண்டு அணைக்கட்டுக்குள் உள்ள அமலை செடி அகற்றிதரவேண்டும் என பொதுமக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo