Onetamil News Logo

கிருஷ்ணாபுரம் & பிரம்ம சக்தியம்மன் கோயிலுக்கு கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம்

Onetamil News
 

கிருஷ்ணாபுரம் & பிரம்ம சக்தியம்மன் கோயிலுக்கு கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம்


செய்துங்கநல்லூர், 2019 ஆகஸ்ட் 14 ;கிருஷ்ணாபுரம் & பிரம்ம சக்தியம்மன் கோயிலுக்கு கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்,செய்துங்கநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் ஸ்ரீபிரம்ம சக்தியம்மன் கோயிலில்  கொடை விழா நடைபெற்றது. முதல் நாள் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.  மதியம் 1 மணி அளவில் சங்குமுகம் தீர்த்தம் எடுத்து செல்லுதல்  நடந்தது. பின் கிருஷ்ணாபுரம் பிள்ளையார்கோயிலில் இருந்து தீர்த்தம் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது.  மாலை 6 மணிக்கு புனித தீர்த்தம் எடுத்து வந்து கும்பம் ஏற்றுதல் , அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது.
இரவு 8 மணிக்கு மாக்காப்பு அலங்கார பூஜை நடந்தது.  இரண்டாம் நாள் காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், சக்தி ஹோமம் நடந்தது. காலை 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின் கருங்குளம் ஆற்றில் கரகம் தீச்சட்டி மற்றும் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.  மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.
மாலை 4 மணிக்கு பொங்கல் இடுதல் , மாலை 6 மணிக்கு கனி வகைகள் பூஜை, மாலை 7 மணிக்கு, மாவிளக்கு  மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல் நடந்தது. இரவு 10 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. இரவு 12 மணிக்கு இரவு உச்சி காலபூஜை நடந்தது. இரவு 1 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நடந்தது.
கொடை விழா ஏற்பாட்டை  பொன்ராஜ் சுவாமிகள், கணேசன் பட்டர், ஆகியோர் தலைமையில் கிருஷ்ணாபுரம் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோவில் கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo