Onetamil News Logo

கருங்குளத்தில் பற்றி எரிந்த தீ 50 ஆயிரம் வாழைகள் நாசம் ;விவசாயி மாரடைப்பில் மரணம் ;எஸ்.பி.  அருண் பால கோபாலன் பாரவையிட்டு ஆய்வு   

Onetamil News
 

கருங்குளத்தில் பற்றி எரிந்த தீ 50 ஆயிரம் வாழைகள் நாசம் ;விவசாயி மாரடைப்பில் மரணம் ;எஸ்.பி.  அருண் பால கோபாலன் பாரவையிட்டு ஆய்வு   


செய்துங்கநல்லூர்,  2019 செப் 8 ; கருங்குளம் வயல்வெளியில் வாழை தீ பற்றி எரிந்து 50 ஆயிரம் வாழைகள் நாசமானது. இதை கண்ட விவசாயி மாரடைப்பில் மரணமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட  கருங்குளம் மாதாங்கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் ஆறுமுகம் (45) இவருக்கு சொந்தமான விவசாய கருங்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. நேற்று மதியம் 12 மணியளவில்   தீடிரென்று இந்த பகுதி வாழைதோட்டத்தில்  தீ பற்றியது. இந்த தீ  காற்றில் பரவியது. இதில் அருகில் உள்ள தோட்டத்தில் தீ புகுந்தது.  இதனால்  சுமார்  50 ஆயிரம் வாழைகள் கருகின.  100க்கும் மேற்பட்ட பனைமரங்கள் எரிந்து சாம்பலாயின. இதற்கிடையில் இந்த  வாழை தோட்டத்துக்கு ஆறுமுகம் வந்துள்ளார். அவருக்கு சொந்தமான வாழை தன் கண் முன்னால் எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  அவரும் தீயை அணைக்க போராடியுள்ளார். ஆனால் காற்று அதிகமாக அடித்த காரணத்தினால் பரவிய தீ வாழைகளை கருகியது. இதில் குலை தள்ளிய வாழை குலைகளும் கருகின. இதனால் ஆறுமுகத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை  கருங்குளம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் ஆறுமுகம் இறந்தார். இதற்கிடையில் தீயை அணைக்க ஸ்ரீவைகுண்டம்  தீயணைப்படையினர்  வந்தனர்.  தீ எரியும் இடம் மெயின் ரோட்டில் இருந்த தூரத்தில் இருந்த காரணத்தினால் வாகனத்தினை அருகில் கொண்டு செல்ல இயலவில்லை. எனவே டீயூப் மூலம் தண்ணீர் கொண்டு சென்று தீயை போராடி அணைத்தனர்.
 இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன்,  ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர்  ரெகுராஜன்,  தட அறிவியல்  துறை உதவி  இயக்குனர் கலா லெட்சுமி,  செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் முத்து லெட்சுமி உள்பட பலர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
 இந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.  தீ எரிய காரணம் என்ன என்று செய்துங்கநல்லூர் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தீயினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடுவழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo