Onetamil News Logo

ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வீதம் வட்டி தருவதாகக் கூறி 90 கோடி ரூபாய் மோசடி செய்த இருவர் சேலத்தில் கைது

Onetamil News
 

ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வீதம் வட்டி தருவதாகக் கூறி 90 கோடி ரூபாய் மோசடி செய்த இருவர் சேலத்தில் கைது


சேலம் 2020 பிப்ரவரி 13 ;ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வீதம் வட்டி தருவதாகக் கூறி 90 கோடி ரூபாய் மோசடி செய்த இருவர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட் வின் ஐடி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளனர். இதனை உண்மை என நம்பி ஏராளமானோர் டெபாசிட் செய்த நிலையில், யாருக்கும் வட்டி தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே இந்நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்து ஏமாந்த சின்னதிருப்பதியை சேர்ந்த சிவா என்பவர், இது குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், அந்த நிறுவனத்தினர் இதே பாணியில் 9 ஆயிரம் பேரிடம் தலா ஒரு லட்சம் வீதம் 90 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம், சுப்பிரமணி ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களுடன் இணைந்து நிறுவனத்தை நடத்தி வந்த வினோத்குமார் என்பவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo