Onetamil News Logo

செங்கம் அருகே மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

Onetamil News
 

செங்கம் அருகே மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.



 

செங்கம் அருகே மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
 
செங்கம்  11-ஜனவரி-2017  ; திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட வாசுதேவன்பட்டு அன்னந்தல் மற்றும் மேல்ப்புஞ்சை ஆகிய குருப்பில் மனுநீதி நாள்  முகாம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபானமை நல அலுவலர் தண்டாயுதபானி தலைமையில் நடைபெற்றது. மேலும்  செங்கம் வட்டாட்சியர் காமராஜ் சமூகநல பாதுகாப்பு தனிவட்டாசியர் ரேணுகா இறையூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ஜெயபாரதி கிராம நிர்வாக அலுவலர் குணநிதி மற்றும் பலர் இவர்களுடன் கிராம நிர்வாக உதவியாளர்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இவர் பேசுகையில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த இத்திட்டங்கள் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருப்பதாக கூறினார். 
 
இம்முகாமில் பொங்கல் பரிசுகளான கரும்பு சர்க்கரை பச்சரிசி ஏலக்காய் முந்நிரி மற்றும் திராட்சை இவற்றுடன் இலவச வேட்டி சேலை போன்ற பொருட்கள் குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் முதியோர்களுக்கு இலவச உதவித்தொகைக்கான ஆணையை 13 பயனாளிக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த வாரத்தில் பெறப்பட்ட இப்பகுதி மக்களிடம் பெறப்பட்ட புதிய குடும்ப அட்டை குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் சேர்ந்தல் முதியோர் மற்றும் விதவைகள்  ஓய்தியூம்இ புதிய பட்டா மற்றும் பெயர் பட்டா பெயர் மாற்றம் போன்ற பல்வேறு நலத் திட்டங்களுக்காக பெறப்பட்ட 102 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 57 மனுக்கள் ஏற்கப்பட்டு பயனாளிகளுக்கு உரிய நலத்திடங்கள் வழங்கப்பட்டன. 

செய்தியாளர் க. ராஜா

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo