Onetamil News Logo

சில்லாங்குளம் பள்ளி மாணவி தற்கொலை,பங்களாவில் வாழும் இரவு காவலர்கள் தம்பதியினர் எஸ்கேப், ஒருநாளும் அரசுப் பணியில் ஈடுபட்டதில்லை சம்பளம் மட்டும் பெற்றுவருகின்றனர் எப்படி? 

Onetamil News
 

சில்லாங்குளம் பள்ளி மாணவி தற்கொலை,பங்களாவில் வாழும் இரவு காவலர்கள் தம்பதியினர் எஸ்கேப், ஒருநாளும் அரசுப் பணியில் ஈடுபட்டதில்லை சம்பளம் மட்டும் பெற்றுவருகின்றனர் எப்படி? 


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை சில்லாங் குளத்தில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளி கழிவறையில் அதே பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.                        
             சில்லாங் குளத்தில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளி கழிவறையில் அதே பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். . தகவல் அறிந்த போலீசார், உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தங்களுக்கு தெளிவான தகவல் அளிக்கப்படவில்லை என மாணவியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.                             
                   மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் தங்களுக்கு தெளிவான தகவல் அளிக்கப்படவில்லை என மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் சடலத்தை வாங்க மறுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சில்லாங்குளம் தனியார் பள்ளியில் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்  உள்ளிட்டோரும் ஆய்வில் கலந்து கொண்டனர். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டிய  நிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன்,  பள்ளி மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும். மாணவியின் கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து பின்னர் விரிவாக தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பள்ளி மாணவி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.முதற்கட்ட விசாரணையை பள்ளியில் சிபிசிஐடி தொடங்கியது.பங்களாவில் வாழும் இரவு காவலர்கள் தம்பதியினர் ஒருநாளும் அரசுப் பணியில் ஈடுபட்டதில்லை சம்பளம் மட்டும் பெற்றுவருகின்றனர் எப்படி?  நிர்வாகத்தில் பல குழப்படிகள் இருப்பதனால் வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது.இதனால் பள்ளியை வழிநடத்த தலைமையாசிரியை தடுமாறுகிறார்? இவரிடமே ஆசிரியர்கள் பேசக்கூடாது என்று உத்தரவு,இரவில் ஸ்டிபன் தம்பதியினர் காவலர்கள் பணியை பார்த்தார்களா? இல்லையா? என்பதை மாணவ,மாணவியரிடம் நேரில் விசாரணை மேற்கொள்ளவேண்டும்,குறிப்பாக இரவு காவலர்கள் யார்? என்று அவர்களது பெயர் கேட்டு மாணவ,மாணவியரிடம் நேரில் விசாரணை நடத்த வேண்டும்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo