Onetamil News Logo

ஆசைக்கு இணங்க மறுத்ததால் கள்ளக்காதலியை சாலையில் இழுத்துச் சென்று அடித்து கொலை 

Onetamil News
 

ஆசைக்கு இணங்க மறுத்ததால் கள்ளக்காதலியை சாலையில் இழுத்துச் சென்று அடித்து கொலை  



சித்தூர் 2019 ஆகஸ்ட் 9: உல்லாசமாக இருக்க மறுத்த கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சித்தூர் போலீஸ் காலனியை சேர்ந்தவர் சுரேஷ்(47), ராணுவ வீரர். இவரது மனைவி சீதாராணி(37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக துர்கா காலனியில் உள்ள சொந்த வீட்டில் சீதாராணி குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர்களது வீட்டிற்கு அருகே வசித்து வந்தவர் ஹமீது(30), ஆட்டோ டிரைவர். சீதாராணியின் குழந்தைகளை கடந்த 3 ஆண்டுகளாக ஹமீது தனது ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்று வருவது வழக்கம். அப்போது ஹமீதுக்கும், சீதாராணிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த சுரேஷ், சீதாராணியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் சீதாராணியின் பெற்றோர் தங்களது மகளையும், ஹமீதையும் எச்சரித்தனர். இதையறிந்த ஹமீதின் மனைவி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் ஹமீதின் பெற்றோர், அவரை துபாய்க்கு சென்று வேலை செய்யுமாறு அனுப்பி வைத்தனர். கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்த ஹமீது கடந்தாண்டு ஊர் திரும்பினார். அப்போது மீண்டும் கள்ளக்காதல் தொடர்பு நீடித்தது. கடந்த சில நாட்களாக ஹமீது, தனது கள்ளக்காதலியான சீதாராணியை உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்துள்ளார். ஆனால் சீதாராணி மறுப்பு தெரிவித்தாராம். இந்நிலையில் நேற்று மாலை சீதாராணியின் வீட்டிற்கு சென்ற ஹமீது, உல்லாசமாக இருக்க சம்மதிக்கும்படி வற்புறுத்தினாராம். ஆனால் அப்போதும் சீதாராணி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹமீது, சீதாராணியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த அவர், வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து அலறியபடியே சாலையில் மயங்கி விழுந்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சீதாராணியை சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே அப்பகுதி மக்கள் வருவதை பார்த்த ஹமீது தப்பி ஓடினார். பொதுமக்கள் விரட்டிச்சென்றும் பிடிக்க முடியவில்லை. அதற்குள் அவர் அப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தார். அவரைசித்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், வழியிலேயே ஹமீதும் இறந்தார். தகவல் அறிந்த சித்தூர் போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo